KOLNews

ரூ. 5 லட்சம் ..! - தென்னை மரம் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம்..!

தென்னை வளர்ச்சிவாரியம் , தென்னை மரம் ஏறுவோர் மற்றும் பதனீர் இறக்குவோருக்கான ‘ கேரா சுரக்சா ’ காப்பீட்டுத்திட்டத்தை , அமல்படுத்தி உள்ளது . 

தற்போது மாற்றி அமைக்கப்பட்ட இந்த காப்பீட்டுத் திட்டத்தின் மதிப்பு ரூ .5 லட்சம் . ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனம் மூலம் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்த திட்டத்தின் பலன்களை 18 முதல் 65 வயது வரையுள்ள தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் பெறலாம் . 

இதனை பயன்படுத்திக்கொள்ள , இதற்கான விண்ணப்பத்தை வேளாண் அதிகாரி , பஞ்சாயத்து தலைவர் , சிபிஃஎப் அலுவலக அதிகாரிகள் , சிபிசி இயக்குநர்களின் கையெழுத்தை பெற்று , இத்திட்டத்தில் இணையவேண்டும். 

மேலும் இது தொடர்பான விவரங்களை ,  www.coconutboard.gov . in . இணையதளத்தில் காணலாம். அத்துடன்,  044-23662684 , 23663685 என்ற தொலைபேசி எண் , ro-chennai@coconutboard.gov.in என்ற இ - மெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

English Summary

Rs 5 lakh ..! - Accident insurance scheme for coconut tree workers ..!

Latest Articles

KOLNews