KOLNews

சவ்ரவ் கங்குலியும்..சமையல் எண்ணையும்..!

பொதுவாக 'கொலஸ்ட்ரால்' என சொல்லப்படும் கொழுப்பு இதயத்தை அடைத்து, மாரடைப்புக்கு வழிவகுக்கும் என்பதால் மருத்துவர்கள், குறிப்பாக ஆங்கில மருத்துவர்கள், 'ரைஸ் பிரான்' எண்ணெய்களை பரிந்துரைக்கிறார்கள். 

மறுபுறம், பாரம்பரியமாக  செக்கில் ஆட்டிய எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்ட காலத்தில், இந்த அளவிற்கு இதய நோயாளிகள் எண்ணிக்கை இல்லை, என்று சமூகவலைத்தளங்களில்  சமீப வருடங்களில் பரவும் செய்திகளால், மீண்டும் செக்கு எண்ணெய்களுக்கு மவுசு வந்ததுடன், அவற்றை விற்கும் பிரத்யேக எண்ணெய்க்கடைகளும் ஆங்காங்கு திறக்கப்பட்டுள்ளன. 

செக்கு எண்ணெய் உடலுக்கு ஆரோக்கியமானது என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவிற்கு முந்தைய தலைமுறை அளவிற்கான உடலுழைப்பு தற்போதைய மனிதர்களுக்கு இல்லை என்பதும். ஆகையால், மருத்துவர்கள் அறிவுரைகளையும் புறந்தள்ள முடியவில்லை. 

Everything you need to know about rice bran oil | The Times of India

இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மாரடைப்பினால் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்., அதைத்தொடர்ந்து அவர் நடித்திருந்த 'ரைஸ் பிரான்' எண்ணெய் விளம்பரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது சம்பத்தப்பட்ட நிறுவனம். இதய நோய்க்கு பல காரணங்கள் இருக்கலாம், கங்குலி தொடர்ந்து எங்கள் விளம்பர தூதுவராக நீடிப்பார், என அந்நிறுவனம் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது.  

இதன் மூலம் ரைஸ் பிரான் எண்ணெய்களையும் மக்கள் சந்தேகத்துடன் பார்க்கும் நிலை வந்துள்ளது. ஒரு தனிநபரின் ஆரோக்கியத்தை வைத்து, ஒரு முடிவுக்கு வரமுடியாது..வரக்கூடாது..!, என்றாலும்  எண்ணெய் விஷயத்தில் கொஞ்சம் தெளிவு பெற வேண்டியது மக்களின் கடமை என்பதையும் மறுப்பதற்கில்லை

English Summary

Savrav Ganguly and cooking oil ..!

Latest Articles

KOLNews