KOLNews

ஒரே வாரத்தில் ஏழு விவசாயிகள் தற்கொலை..? - கர்நாடகாவில் தொடரும் துயரம்

அண்மையில் பெய்த கன மழையால், பயிர்கள் பாழானதை கண்டு கர்நாடகாவில் ஒரே வாரத்தில் ஏழு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளது,  நாட்டின் குறு விவசாயிகளின் நிலைமையை உணர்த்துவதாக உள்ளது. 

வட கிழக்கு பருவ மழையால் லாபம் கிடைக்குமென எதிர்ப்பார்த்திருந்த விவசாயிகளின் கனவை சிதைக்கும் வகையில் தேவைக்கு அதிகமான பெரும்மழை பெய்து. பாடுபட்டு விளைவித்த நெல், துவரம் பருப்பு, இஞ்சி, சோளம், வெங்காயம், காய்கறி பயிர்கள் நாசமாகின. 

Crops Damage due to Flood. [Ref. 27] [Ref. 28] | Download Scientific Diagram

தங்களின் உழைப்பால் உருவான விளைச்சல்கள் நீரில் அடித்து செல்வதை கண்டு, மனம் வெறுத்து விவசாயிகள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் .ஒரே வாரத்தில் ஏழு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட்டுள்ளதாக தெரிகிறது.

தங்களின் விளைச்சல் பாழானதால், விவசாயத்திற்காக வாங்கிய கடனை அடைக்க வழியின்றி, தாவணகரே ஹொன்னாளி, பேலி மல்லுார் கிராமத்தின் சித்தப்பா, 60; நாமதி ஆருன்டி கிராமத்தின் சண்முகப்பா, 47; உத்தரகன்னடா சிர்சியின், நரூர் கிராமத்தின் கங்காதர பகிரப்பா சேஷன்னனவர், 58.ராய்ச்சூர் போகாபுராவின் சேகர் கவுடா மாலி பாட்டீல், 50; துரடகியின் சித்தப்பா கோவிந்தப்பா ஹரிஜனா, 50; ஹாவேரி சிக்காவி, குன்னுார் கிராமத்தின் கோவிந்த எல்லப்பா பசரிகட்டி, 38.தார்வாடின் ஹூப்பள்ளி கிராமத்தின் ஈரப்பா பசப்பா சாவரா, 37, ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இயற்கை நிகழ்வால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், விவசாயத்தில் குறைந்தபட்ச வருமானத்தை உறுதியாக்கும் முறையான அரசு திட்டமிடல்கள் இல்லாததே இது போன்ற சோகங்கள் தொடர காரணம் என சமூகவியலாளர்கள் கருதுகிறார்கள். 

English Summary

Seven farmers commit suicide in one week? - Continuing tragedy in Karnataka

Latest Articles

KOLNews