KOLNews

பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில பாலியல் தொந்தரவு..! - நடிகை அமீஷா படேல் 'பகீர்' தகவல்

பாலிவுட் நடிகை அமீஷா படேல்,  பீகார் பிரச்சாரத்திற்கு சென்ற தனக்கு  உயிருக்கு ஆபத்து இருந்ததாக   கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இது குறித்து பேசியுள்ள நடிகை அமீஷா படேல் 

"டாக்டர் பிரகாஷ் சந்திராவின் விருந்தினராக நான் சென்றேன், நான் பிரசாரம் செய்ய சென்றவர் மோசமான மனிதர், "பாட்னாவிலிருந்து 3 மணிநேரம் பிரச்சாரம் செய்யும் போது அவருடன் சேர்ந்து விளையாடுவதாக அவர் என்னை மிரட்டினார். அதே நாளில் நான் செல்ல வேண்டிய விமானதைப் பிடிக்க அவர் அனுமதிக்காததுடன் என்னை கிராமத்தில் வைத்திருந்தார், நான் ஒப்புகொள்ளாவிட்டால் என்னை அங்கேயே விட்டுவிடுவேன் என்று மிரட்டினார். நான் ஒப்புக்கொள்ளவில்லை, உடன் செல்லவில்லை. 

"நேற்றிரவு கூட அவர் என்னை பிளாக்மெயில் செய்தார், அவர் ஒரு குண்டாவைப் போல நடந்து கொண்டார். இது எனக்கு ஒரு கனவு போல் இருந்தது. நான்  மிகவும் பயந்தேன், நான் மும்பையை பாதுகாப்பாக அடையும் வரை அமைதியாக இருப்பதை தவிர வேறு வழியில்லை., இந்த நபர்களைப் பற்றி உண்மையை மக்கள் அறிய வேண்டும் என்று நான் நினைப்பதால் நான் சொல்ல வேண்டியதை சொன்னேன். இது ஒரு மோசமான அனுபவம். அவர் என்னை தவறாகப் பயன்படுத்தினார். நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம். அவர் எந்த பாதுகாப்பையும் வழங்கவில்லை, அவர்கள் தப்பிக்க முடியாது என்பதை அறிந்து கொள்ளவே நான் பேச முடிவு செய்து இதனை கூறி உள்ளேன்" என கூறி உள்ளார்.

ஆனால் ஆமீஷா படேலின் குற்றச்சாட்டை மறுத்துள்ள  பிரகாஷ் சந்திரா,பொய்யான கூற்றுக்களை தெரிவிக்க அமீஷா படேலுக்கு ஜான் ஆதிகர் கட்சித் தலைவர் பப்பு யாதவ் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் அமீஷா படேல் இது தொடர்பாக போலீசிடம் புகார் ஏதும் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

English Summary

Sexual harassment at the place where the campaign went ..! - Actress Amisha Patel Info

Latest Articles

KOLNews