KOLNews

இன்று சூரிய கிரகணம்..! - ஆர்வத்தை தூண்டும் வளைய அமைப்பு

ஜூன் 10. இன்று, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி மதியம் 1.42 மணிக்கும் மாலை 6.41 இடையே நிகழவுள்ளது . இந்த சூரிய கிராஜகணம் வளைய சூரிய கிரகணம் என சொல்லப்படுகிறது. அதாவது  சூரியனின் 90 சதவீதம் பகுதி முழுவதுமாக நிலவினால் மறைக்கப்பட்டு சூரியனின் விளிம்பு மட்டும் தெரியும் 

 இந்தியாவை பொறுத்தவரையில்,  இந்த சூரிய கிரகணம் அருணாசலப் பிரதேசத்தின் சில பகுதிகளைத் தவிர வேறு எந்த இடத்திலும் பார்க்க முடியாது . உலகளவில் பார்க்கையில்,  கனடாவின் சில பகுதிகள் , கிரீன்லாந்து , ரஷியா,  அமெரிக்காவின் சில பகுதிகள் , வடக்கு அலாஸ்கா ,  ஐரோப்பாலின் சில பகுதிகள் , ஆசியாவின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் இந்த சூரிய கிரகணம் , பகுதி சூரிய கிரகணமாகத் தெரியும்

இன்று இந்த இந்த வளை சூரிய கிரகணம்  இந்திய நேரப்படி சரியாக மதியம் மணி 1-42 க்கு  ஆரம்பித்து பாலை 6.41 வரை நிகழவுள்ளது . இதில் குறிப்பாக முழு வளைய அமைப்பானது 3 நிமிஷங்கள் 51 நொடி  மட்டுமே தெரியம்.. 

பொதுமக்கள் கவனத்திற்கு - சூரியனை எக்காரணம் கொண்டும் நேரடியாக வெறும் கண்களால் பார்க்கக் கூடாது . அதற்காகத் தயாரிக்கப்பட பிரத்யேக சூரியக் கண்ணாடிகளைப் பயன்படுத்தியும் , சூரியனின் பிம்பத்தினை ஊசித்துளை கேமரா மூலம் விழச்செய்தும் , இந்த சூரிய கிரகணத்தை பார்க்கலாம். 

English Summary

Solar eclipse today ..! - Interesting loop system

Latest Articles

KOLNews