KOLNews

சாரி..'தெரியாமல்' விருது கொடுத்துட்டோம் ! - சிக்கிய கான்ஸ்டபிள்..சிக்கலில் அரசு !

தெலுங்கானா. ஆகஸ்டு 15 அன்று நடந்த சுதந்திர தின விழாவில், சிறந்த கான்ஸ்டபிளுக்கான விருதை பெற்றவர் , அதன் அடுத்த நாளே லஞ்ச வழக்கில் சிக்கிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில், உள்ள மெஹபூப் நகர், ஐ டவுன் காவல் நிலையத்தில், கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தவர் திருப்பதி ரெட்டி.. 

இந்நிலையில் , அவர் சிறப்பாக பணியாற்றியதாக , கடந்த, 15ல் நடந்த சுதந்திர தின விழாவில், அவருக்கு, மாநில கலால் வரித் துறை அமைச்சர், சீனிவாஸ், 'சிறந்த கான்ஸ்டபிள்' விருதை வழங்கினார். மாவட்ட, எஸ்.பி. முன்னிலையில், இந்த விருதை, திருப்பதி ரெட்டியிடம் அமைச்சர் வழங்கினார்.

இருப்பினும், விருது பெற்ற மறுநாளான நேற்று முன்தினம், திருப்பதி ரெட்டி லஞ்சப் புகாரில் சிக்கியுள்ளார்.

சம்பவத்தன்று, ரமேஷ் என்பவர், லாரியில் மணல் ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருப்பதி ரெட்டி, அவரை தடுத்து நிறுத்தினார். லாரியில், மணல் ஏற்றிச் செல்வதற்கான அனுமதி சான்றிதழ் உட்பட முறையான ஆவணங்கள், ரமேஷிடம் இருந்தன.

இருப்பினும் , மணலை கடத்துவதாக குற்றம் சாட்டி, வழக்குப்பதிவு செய்யப்போவதாக, ரமேஷை திருப்பதி மிரட்டினார்; புகார் செய்யாமல் இருக்க, தனக்கு, 17 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என, கேட்ட்டுள்ளார் .

இதையடுத்து, இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில், ரமேஷ் புகார் செய்தார். 

அதையடுத்து போலீசாரின் ஆலோசனைப்படி,, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, திருப்பதியிடம், ரமேஷ நேற்று முன்தினம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார், திருப்பதியை, கையும் களவுமாக கைது செய்தனர்.

இதனால் வகையாய் சிக்கிய திருப்பதிக்கு கொடுத்த விருது குறித்தும், அங்கு கிண்டலாக பேசப்படும் சூழல் உருவாகியுள்ளது.

English Summary

Sorry .. We unknowingly gave the award! - Trapped Constable ...

Latest Articles

KOLNews