KOLNews

ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்..! - படப்பிடிப்புகள் துவங்க மத்தியஅரசு அனுமதி..!

பொதுமுடக்கத்தால் படப்பிடிப்பு நடத்த இயலாமல் தவித்து கொண்டிருந்த திரைப்படத்துறையினருக்கு ஒரு இனிய செய்தியாக, திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களுக்கு படப்பிடிப்பை தொடங்கலாம் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அனுமதி அளித்துள்ளார். 

அத்துடன் படப்பிடிப்பின் போது மேற்கொள்ள  வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை அவர் பட்டியலிட்டுள்ளார். 

Lot of evidence to prove that you are a terrorist: Prakash ...

 அதன்படி, 1.  எளிதில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளவர்கள் கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 2. படப்பிடிப்பின்போது தொழிலாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். 3. அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். 4. படப்பிடிப்பிற்கு வரும் தொழிலாளர்களுக்கு கிருமிநாசினி வழங்க வேண்டும். 5. பணியாளர்கள் ஆரோக்கிய சேது செயலியை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். 6. படப்பிடிப்பு தொடங்கும் நிலையங்களின் முகப்புகளில் தேர்மல் ஸ்கேன் பரிசோதனை கட்டாயம் செய்துக்கொள்ள வேண்டும். 7. அனைத்து நேரங்களிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டும். 8. படப்பிடிப்பின்போது யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 9. தொற்று உறுதி செய்யப்பட்டால் படப்பிடிப்பு தளத்தை தூய்மைப்படுத்த வேண்டும்.

இந்நிலையில், மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்று படப்பிடிப்பை மேற்கொள்ள திரைத்துறையினர் தயாராக உள்ளதாக திரை துறை வட்டாரங்களில் பேசப்படுவதுடன், பிரபல கலைஞர்கள் அமைச்சருக்கு நன்றி கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

Start camera .. action ..! - Central government gives permission for shooting ..!

Latest Articles

KOLNews