KOLNews

புலம் பெயர் தொழிலாளர்கள் நிலை..! - மத்திய மாநில அரசுகள், நாளை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஊரடங்கின் காரணமாக நாடெங்கும் உள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் துயரங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உள்ளது.

அத்துடன், இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் அவல நிலை குறித்து நீதிபதிகள் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்.

விசாரணைக்கு பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் சாராம்சம் -

செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் தினந்தோறும் வரும் செய்திகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வெகு தூரத்தில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு நடைப்பயணமாகவும், சைக்கிளிலும் செல்லும் துயரமான நிலையை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றன.

அவர்களுக்கு நெடுஞ்சாலைகள் உள்ள பகுதியைச் சேர்ந்த மாநில அரசு நிர்வாகங்களால் குடிநீர் மற்றும் உணவு வழங்கப்படுவது இல்லை என்றும் புகார்கள் எழுந்து உள்ளன.

Vijayawada: Plight of migrant workers continues unabated

புலம் பெயர் தொழிலாளர்களுக்கான உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியமான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உள்ளது. புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் துயரங்கள் பற்றி சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடம் இருந்து இந்த கோர்ட்டுக்கு கடிதங்களும், மனுக்களும் வந்தவண்ணம் உள்ளன. சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் ரயில் நிலையங்களிலும் மாநில எல்லைகளிலும் சிக்கித் தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி, உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் இலவசமாக செய்து கொடுக்க வேண்டும்.

மத்திய அரசும், மாநில அரசுகளும் இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுத்து இருந்தாலும் அவற்றில் சில குறைபாடுகள் உள்ளன.

எனவே, இந்த பிரச்சினையின் அவசரதன்மையை கருத்தில் கொண்டு மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் இது தொடர்பாக தங்கள் பதில்களை அறிக்கையாக 28-ந் தேதிக்குள் (நாளை) தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு 28-ந் தேதி மீண்டும் விசாரிக்கப்படும்.

என அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

English Summary

Status of migrant workers.! - Supreme Court directs Central and State Governments to respond tomorrow

Latest Articles

KOLNews