KOLNews

போராட்டமே முதன்மை..! - புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்த்த விவசாயிகள்..!

கடந்த 35 நாட்களுக்கு மேளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஆறாவது சுற்றில் பேச்சின் போது இரு பிரச்சனைகளில் உடன்பாடு ஏற்பட்டது' அதையடுத்து, அடுத்த சுற்று பேச்சு ஜனவரி 4ஆம் தேதி நடைபெற உள்ளது. 

மத்திய அரசுடன் கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையின் மூலம், மின்சார சட்டத் திருத்த மசோதா,  வேளாண் காடுகளை அழிக்கும் விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கும் அவசரச் சட்டம் ஆகியவற்றை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.  இருப்பினும் இந்த இரு மசோதாக்களும் இன்னும் சட்ட வடிவம் பெறாத நிலையில்,  மத்திய அரசின் இந்த வாக்குறுதியை மட்டுமே நம்பி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட விவசாயிகள் அங்கு தயாராக இல்லை. 

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்

விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில்  கொள்முதல் செய்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் ஆகிய ஏழு முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதில் தொடர்ந்து உறுதியாக விவசாயிகள் இருப்பதால், புத்தாண்டிலும் குடும்பங்களை பிரிந்து டெல்லி சாலைகளில் அவர்களின் போராட்டம் தொடர்கிறது.

English Summary

Struggle is paramount ..! - Farmers avoid New Year celebrations ..!

Latest Articles

KOLNews