KOLNews

விளம்பரத்துக்காக வழக்கு தோடுப்பதா..? - நடிகை ஜூஹி சாவ்லாவிற்கு 20 லட்சம் அபராதம்..!

டெல்லி உயர்நீதி மன்றம், 5ஜி அலைவரிசை சேவைக்கு எதிராக வழக்கு தொடுத்த நடிகையும் சுற்றுசூழல் ஆர்வலருமான ஜூஹி சாவ்லாவிற்கு 20 லட்சம் அபராதம் அறிவித்து, வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது.

வழக்கு விசாரணைகளை சமூகவலைத்தளங்களில்  வெளியிட்டதன் மூலம் மூன்று முறை வழக்கிற்கு இடையூறு செய்துள்ளார் என தெரிவித்துள்ள நீதிமன்றம், ஜூஹி சாவ்லா இதன் மூலம் சட்ட வழிமுறைகளை தவறாக பயன்படுத்தியுள்ளார் என குற்றம் சாட்டியுள்ளது.

அத்துடன் வழக்கிற்கு இடையூறு செய்த மற்ற நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக திங்களன்று 5கி அலைவரிசை சேவைகளுக்கு எதிராக வழக்கு தொடுத்த ஜூஹி சாவ்லா, அது மக்களுக்கும், விலங்குகளுக்கும், செடிகொடிகளுக்கும், சுற்றுசூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்  கதிர்வீச்சுகளை வெளியிடும் என்பதால் அதனை தடை செய்யவேண்டுமென டெல்லி நீதிமனறதை கோரியிருந்தார்.

இதனை கவனத்தி எடுத்துக்கொண்ட நீதிமன்றம், இது குறித்து அரசு தரப்பிலோ, அல்லது தொழில் நுட்பம் குறித்தோ யாரிடமும் விளக்கம் கேட்கப்படாமல், நேராக நீதிமன்றத்தை நாடியது ஏன் ?,என கேள்வி எழுப்பியது. அத்துடன் வாதிகள், தங்கள் உரிமைகளை கேட்க அரசை அணுகி, அது மறுக்கப்பட்டால் மட்டுமே நீதிமன்றத்தை நாட வேண்டும் என தெரிவித்தது. 

அத்துடன், இது பழுதான வாதம், வெறும் ஊடக விளம்பரத்துக்காக போடப்பட்ட வழக்கு என்பதை தாண்டி சொல்வதற்கு ஒன்றுமில்லை..என கூறி நீதிமனறத்திற்கு 3 முறை தவறாக இடையூறு அளித்ததாக கூறி,நடிகை ஜூஹி சாவ்லாவிற்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

English Summary

Suing for advertising ..? Actress Juhi Chawla fined Rs 20 lakh

Latest Articles

KOLNews