KOLNews

சுவாமி சின்மயானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறவில்லை..! - 'யு' டர்ன் அடித்த மாணவி

உத்தரபிரதேசத்தில் சொந்தமாக ஆசிரமம் ஒன்றையும், பல்வேறு கல்வி நிறுவனங்களையும்  நடத்தி வருகிறார்.பாஜகவை  சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சுவாமி சின்மயானந்தா. இந்நிலையில், ஷாஜகான்பூரில் உள்ள அவரது சட்டக்கல்லூரியில் படித்து வந்த 23 வயது மாணவி ஒருவர், கடந்த ஆண்டு அவர் மீது பாலியல் பலாத்கார புகார் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சின்மயானந்தா கைது செய்யப்பட்டு, பின் கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். லக்னோவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ. வழக்குகளுக்கான தனிக்கோர்ட்டில் இவ்வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜரான அந்த மாணவி, 'அரசுத்தரப்பு கூறுவது போல், சின்மயானந்தா மீது எந்த குற்றச்சாட்டும் தான் கூறவில்லை' என்று கூறி அரசுத்தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார், இவரின் இந்த திடீர் மாற்றத்தையடுத்து  அரசுத்தரப்பு, அம்மாணவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒரு மனு தாக்கல் செய்தது. அம்மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

English Summary

Swami Chinmayananda is not accused of sexual harassment ..! - The student who take the 'U' turn

Latest Articles

KOLNews