KOLNews

இந்தியர்களின் ஸ்விஸ் வங்கி கணக்கு ..! - முதல் பட்டியல் (மட்டும்) கிடைத்தது..!

ஸ்விஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்கு பற்றிய முதல் பட்டியல், இந்தியா - ஸ்விஸ் வங்கிக்கு இடையே நடைபெற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மோடி  முதல் முறை பிரதம வேட்பாராக அறிவிக்கப்பட்டு மக்களவை தேர்தலை சந்தித்த நேரத்தில் கொடுத்த வாக்குறுதி, சுவிஸ் வங்கியில் முடங்கி இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை வெளி கொண்டுவருவது.

ஆட்சிக்கு வந்த பின்பு  ஸ்விஸ் வங்கி - இந்திய அரசுக்கு இடையே இந்தியர்களின் வங்கிக் கணக்கு தன்னிச்சையாக பரிமாற்றும் ஒப்பந்தம் கையெழுத்தானதும் குறிப்பிடத்தக்க விஷயம் தான்.

பொதுவாக, ஸ்விட்சர்லாந்தின் ஃபெடரல் வரி நிர்வாகத்துக்கும், 75 நாடுகளுக்கும் இடையே நடந்த இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், அந்தந்த நாட்டு குடிமக்கள், ஸ்விஸ் வங்கியில் வைத்திருக்கும் வங்கிக் கணக்கு குறித்த விவரங்கள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.

அந்த வகையில் அடுத்த பட்டியல் 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வழங்கப்படும் என தெரிகிறது.

இந்த பட்டியல் மிக மிக ரகசியமாக வைக்கப்படும். இந்த பட்டியலில் எத்தனை இந்தியர்களின் வங்கிக் கணக்குகள் பற்றிய விவரங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன என்ற விவரம் கூட வெளியிடப்படவில்லை. 

Image result for swiss bank

மேலும், இந்த பட்டியலில் உள்ள பெரும்பாலான கணக்குகளில் இருந்த பணம் சென்ற வருடமே எடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

 

வழக்கம் போல், ஸ்விஸ் நன்கு கணக்கு விவகாரம் இந்தியாவை பொறுத்தவரையில், வரும்...ஆனா வராது .! என்கிற நிலையே தொடர்வதாக தெரிகிறது.

English Summary

Swiss bank account of Indians ..! - First list (only) available ..!

Latest Articles

KOLNews