KOLNews

'டேபிள் டாப்' ரன்வே..?

பொதுவாக மலைப்பாங்கான நகரங்களிலும் உயரமான பகுதிகளிலும் அமைக்கப்படும் விமான ஓடு தளங்களை 'டேபிள் டாப்'  ரன்வே என அழைக்கிறார்கள், இவை வழக்கமான ஓடுதளத்தை விட நீளம் குறைவாக இருக்கும். 

விமானிகளின் திறமைக்கு சவாலாக உள்ள இந்த வகை விமான தளங்களிலிருந்து விமானத்தை டேக் -ஆப்  செய்யும் போது  வேகத்தை தொடக்கத்திலிருந்து அதிகப்படுத்தி விரைவாக விமானத்தை மேலே எழுப்ப வேண்டும். அதேபோல விமானத்தை தரையிறக்கும் போது ஓடுதளம் நீளம் குறைவு என்பதால் நீண்ட தொலைவில் விமானத்தை ஓடவிடாமல் விமானம் இறங்கும் போதே வேகத்தை குறைத்துக் கொண்டே வந்து விமானத்தை நிறுத்த வேண்டும். 

அத்துடன், டேபிள் டாப் ஓடுதளத்தில் பார்வை மாறி ஏதாவது பிம்பம் ஆகியும் விபத்தை ஏற்படுத்தும். அதாவது  ஓடுதளம் அருகே வந்து விட்டது போன்ற பிம்பத்தை உருவாக்கி அதை நம்பி விமானத்தைஇறக்கி விட்டால் விபத்தில் சிக்கி விடும் அபாயம் உண்டு அதாவது உண்மையில் ஓடுதளம் வெகு தொலைவில் இருக்கும் ஆனால் விமானிக்கு அருகே இருப்பது போல தோற்றத்தை டேபிள் டாப் ஓடுதளம் ஏற்படுத்தும். 

பொதுவாக டேபிள் டாப் ஓடுதளம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஓடுதளம் நீளம் மிக குறைவாகதான் இருக்கும். கோழிக்கோடு விமான நிலைய 'டேபிள் டாப்' 10 ஆயிரம் அடி நீளம் கொண்டது மற்ற டேபிள் டாப் ஓடுதளத்தை விட சற்று நீளமானது தான் என்றாலும் ஆபத்தான ஒன்றாக தான் பார்க்கப்படுகிறது. 

English Summary

'Table Top' Runway ..?

Latest Articles

KOLNews