உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில், 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் , வகுப்பில் உட்காருவதில் ஏற்பட்ட சர்ச்சையில் தன் உடன் படிக்கும் சகமாணவரை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் கூறப்படுவதாவது - ,14 வயதுடைய இந்த இரண்டு சிறுவர்களும்,புதன்கிழமை வகுப்பில் தங்கள் உட்காரும் இருக்கை தொடர்பாக சண்டையிட்டனர்.
இதில் கோபமடைந்த ஒரு மாணவர், ராணுவத்தில் இருந்து விடுப்பில் வீடு திரும்பிய தனது மாமாவின் துப்பாக்கியை பள்ளிக்கு எடுத்து வந்துள்ளார்.
அதனை கொண்டு தன்னுடன் முந்தைய நாள் சண்டையிட்ட சக மாணவனை தலையில் சுட்டுள்ளார். தொடர்ந்து மார்பிலும், வயிற்றிலும் என மொத்தம் 3 முறை சுட்டுள்ளார். சம்பவ இடத்திலேயே சுடப்பட்ட மாணவன் இறக்க, முதல் தளத்திலிருந்த தன் வகுப்பறையிலிருந்து, தரைதளத்திற்கு ஓடி வந்த மாணவன், தன்னை பிறர் பிடிக்காத வகையில் வானை நோக்கியும் சுட்டுள்ளார். இருப்பினும் ஆசிரியர் மற்றும் சில நிர்வாகிகள் அந்த மாணவனை எதிர்கொண்டு பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
.பின் அவனது பையில் மற்றொரு நாட்டு கைத்துப்பாக்கியையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
சகமாணவனை கொலைவெறிகொண்டு 14 வயது மாணவன் சுட்டு கொன்றுள்ளது , நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய சம்பவமாக மாறியுள்ளது.
English Summary
Terrible in UP ..! - 10th grader who shot a fellow student