KOLNews

பயங்கரவாதிகளின் நாசவேலை முறியடிப்பு..! - ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் கைப்பற்றியது டெல்லி போலீஸ்

இந்தியாவின் வடமாநிலங்களில் அக்டோபர் மாதத்தில் விசேஷமாக  கொண்டாடப்படும் தசரா விழாவை சாதகமாக்கி, நாடு முழுவதும் குண்டுவெடிப்பை நிகழ்த்த செய்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டிருக்கிறது. 

முன்னதாக இது குறித்து தகவல் அறிந்த டெல்லி போலீசார், இந்த கும்பலை பிடிப்பதற்காக தனிப்படை ஒன்றை ஏற்படுத்தி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் . 

இந்த வேட்டையில், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 2 பேர் உள்பட 6 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர் . இதனை டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனர் நீரஜ் தாக்குர் , இணை கமிஷனர் பிரமோத் குஷ்வஹா ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். 

இது தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது -   நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்த  நூல் சந்த் லாலா , அமீர் ஜாவீது (பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள்) ஆகிய 2 பயங்கரவாதிகள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளோம் . இவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும் , வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது . பாகிஸ்தானில் பயிற்சி ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இருந்து ஒருவரையும் , டெல்லியில் இருந்து 2 பேரையும் , உத்தரபிரதேசத்தில் இருந்து 3 பேரையும் கைது செய்துள்ளோம் . இதில் 2 பேர் மஸ்கட்டை சேர்ந்தவர்கள் , இவர்கள் பாகிஸ்தானுக்கு அழைத்து செல்லப்பட்டு ஏ.கே .47 ரக துப்பாக்கியை பயன்படுத்துதல் உள்ளிட்ட ஆயுத பயிற்சி 15 நாட்கள் அளிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது . பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற குழுவில் சுமார் 15 பேர் வங்கமொழியில் பேசியுள்ளனர் . அவர்களுக்கும் ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது . இவர்கள் 2 குழுவாக பிரிந்துள்ளனர் . இதில் ஒரு குழுவை தாவூத் இப்ராகிமின் சகோதரர் அனீஸ் இப்ராகிம் ஒருங்கிணைத்துள்ளது தெரியவந்துள்ளது.

English Summary

Terrorist sabotage thwarted ..! - Delhi Police seize weapons and ammunition

Latest Articles

KOLNews