KOLNews

அதுவும், உனக்குத் தானே சொந்தம் ?

நாம் மேற்கொள்ளும் பயணங்கள் எல்லா நேரங்களிலும் சௌரியமாக அமைந்துவிடாது. சக பயணிகளின் சில நடவடிக்கைகள் நமக்கு எரிச்சலாய் ஏற்படுத்தும், அது போன்ற நேரங்களில் எப்படி பக்குவமாய் நடந்து கொள்வது என்பதற் எடுத்துக்காட்டாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி பாபு இராஜேந்திர பிரசாத் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம். 

அது சுதந்திரப் போராட்டக் காலம் . இராஜேந்திர பிரசாத் ஒரு முறை , பாட்னாவிலிருந்து தம் சொந்த ஊருக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார் .

அவருக்கு எதிர்ப்புறம் அமர்ந்திருந்த ஓர் இளைஞன் தொடர்ந்து  சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான் . அவன் வெளியிட்ட புகை ராஜன் பாபுவின் முகத்தை நோக்கியே வந்து பெருத்த சங்கடம் அளித்தது . 

ராஜன்பாபு இளைஞனை நோக்கி , " தம்பி , நீ புகைக்கும் சிகரெட் உனக்குச் சொந்தமானதுதானே ? ' என்று கேட்டார் .

 " பின்னே , நான் புகைக்கும் சிகரெட் என்னுடையதாக அல்லாமல் உங்களுடையதாகவா இருக்க முடியும் ? என்று இளைஞன் கர்வமாகத் திருப்பிக் கேட்டான் .

 உடனே ராஜன்பாபு , " சிகரெட் உனக்குச் சொந்தமாக இருக்கும் போது , அதன் புகையும் உனக்குத்தானே சொந்தமாக வேண்டும் ? அதை மட்டும் ஏன் என் மீது ஊதித் தள்ளுகிறாய் ? " என்று இனிய குரலில் வினவினார் . 

அதன் பிறகு இராஜேந்திர பிரசாத் ரயிலை விட்டு இறங்கும்வரை அந்த இளைஞன் புகை பிடிக்கவேயில்லை !.

English Summary

That, too, belongs to you?

Latest Articles

KOLNews