KOLNews

மாணவிகளின் உள்ளாடைகளை அவிழ்க்க சொன்ன கல்லூரி முதல்வர் ..! குஜராத் கொடுமை..!

எவ்வளவு தான் நாகரீக வளர்ச்சி அடைந்தாலும், பெண்கள் இன்னும் சமூகத்தில் உள்ள பிற்போக்குத்தனகளால் பெரிதும் பாதிக்கப்பட்டே வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தை போல் இல்லாமல், வட மாநிலங்களில் பெண் அடிமைத்தனமும், ஆண் அதிக்கமும் காலமாற்றத்தையும் மீறி இன்னும் உயிர்ப்புடனேயே உள்ளன.

அதன் விளைவாக  நடந்த ஒரு கொடுமையான சம்பவம், நவீன சமுதாயத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் , பூஞ்ச் நகரில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில், மாதவிடாய் காலத்தில் சமையல் அறையில் நுழைந்ததாக கூறி, 68 மாணவிகளின் ஆடைகளை களைந்த சம்பவம் நடந்துள்ளது.

இங்கு படிக்கும் மாணவிகள் மாதவிடாய்  காலங்களில்,விடுதியின் சமையல் அறைக்கும் , கோவில்களுக்கும் செல்ல கூடாது எனவும், அத்துடன் சக மாணவிகளுடன் பழக  தடை  இருப்பதாகவும்  சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கல்லூரி விடுதியின் காப்பாளர் கொடுத்த புகாரின் பேரில் , கல்லூரி முதல்வர் 68 மாணவிகளை கழிவறைக்கு வரிசையாக அழைத்து சென்று உள்ளாடைகளை களைந்து சோதித்தாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, கல்லூரி முதல்வர், மற்றும் வார்டன் உட்பட நால்வர் மீது காவல் துறை முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்திருப்பதாக தெரிகிறது.

பெண்மையை கேவலப்படுத்தும் இந்த செயலில் , அறிவை வளர்க்க வேண்டிய கல்லூரியே ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

English Summary

The college principal who told the female students to take off their innerwears ..! Gujarat atrocities ..!

Latest Articles

KOLNews