நேற்று மாலை வெளியிடப்பட்ட நீட் தேர்வு பகுப்பாய்வுகள் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், தேர்வு முகமையின் இணையதளத்தில் தற்போது திருத்தப்பட்ட பகுப்பாய்வின் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக தேர்வு முகாமை மாநில வாரியாக கொடுத்த தரவுகளின்படி, நீட் தேர்வு எழுதிய மாணவர்களைவிட தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானதாக இருந்தது, பலரை புருவத்தை உயர்த்த செய்ததுடன், இது குளறுபடியா..அல்லது மோசடியா? என கேள்விகளை எழுப்ப வைத்தது. அதை தொடர்ந்து பகுப்பாய்வுகள் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வை எழுத நாடு முழுவதும் 15,97,435 பேர் விண்ணப்பித்திருந்தனர். கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு பலத்த கட்டுப்பாடுகளுடன் கடந்த மாதம் 13ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. அத்துடன் இதில் விடுபட்டவர்கள் மீண்டும் அக்டோபர் 14ஆம் தேதி தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டது
13,66,945 பேர் தேர்வை எழுதிய நிலையில் 7,76, 500 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது மாநில தேர்ச்சி விகிதம் எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்ததாக புகார்கள் எழுந்தன.
குறிப்பாக திரிபுரா உத்தரப் பிரதேசம் மேற்கு வங்கம் தெலுங்கானா உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் புள்ளிவிவரங்கள் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. (முன்னதாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தில் திரிபுராவில் மூவாயிரத்தி சொச்சம் பேரே தேர்வு எழுதிய நிலையில், 88ஆயிரத்தி சொச்சம் பேர் தேர்வானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது). அந்த வகையில் நாட்டிலேயே நீட் தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 99,610 மாணவர்களில் 57, 215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் 57% ஆகும்
English Summary
The confusion is over ..! - These are the real NEET exam results ..!