KOLNews

தடுப்பூசியை சாத்தியமாக்கியதன் மூலம் நாடு பெருமையடைகிறது..! - பிரதமர் மோடி

கொரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபட , இரண்டு தடுப்பூசிகளை, மத்திய அரசு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்த நிலையில்,  நேற்று டெல்லியில் நடந்த, தேசிய அளவியல் மாநாட்டில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில்,பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 

ஆபத்து அவர் கூறுகையில், துவங்க உள்ள உலகின் மிகப் பெரிய தடுப்பூசி இயக்கத்தை சாத்தியமாக்கிய, நம் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்களால், நாடு பெருமைபடுகிறது. இந்தியாவிலேயே இந்த தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.'மேக் இன் இந்தியா' எனப்படும், இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு, வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதுடன், அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும். 

அதே நேரத்தில் உலகெங்கும் இந்திய பொருட்களை குவிக்க வேண்டும் என்பது, நம் நோக்கமல்ல. ஆனால், உலகின் எந்த மூலையாக இருந்தாலும், இந்திய பொருட்களை பயன்படுத்துவோர் திருப்தி அடைய வேண்டும், என தெரிவித்தார் மோடி .

English Summary

The country is proud by made the vaccine possible ..! - Prime Minister Modi

Latest Articles

KOLNews