KOLNews

அடுத்த உயிர்கொல்லி ..! - வேகமாக பரவும் 'காலா அசார்' எனும் கருங்காய்ச்சல்..!

ஏற்கனவே கொரோனா தொற்று, உருமாறிய கொரோனா தொற்று என வியாதிகள் அடுத்துடுத்து மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், மலேரியாவுக்குப் பிறகு உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய ஆட்கொல்லி நோயாக அறியப்படும் கருங்காய்ச்சல், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Latest news, opinion, analysis on kala azar, Videos, photos, magazine  stories | Down To Earth

'காலா அசார்' என்றழைக்‍கப்படும் இந்த கருங்காய்ச்சல், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் பரவி உள்ளதாக சொல்லப்படும் நிலையில், அசாம், ஹிமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கேரளா, சிக்கிம், உத்தரகாண்ட்  போன்ற மாநிலங்களில்  குறைந்த அளவிலான எண்ணிக்கையில் பாதிப்புகள் இருப்பதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. 

இந்நோய் ஒட்டுண்ணிகளால் பரவக்‍கூடியது என்றும், மலேரியாவுக்குப் பிறகு உலகிலேயே 2-வது பெரிய ஆட்கொல்லி என்றும், முறையான சிகிச்சை அளிக்‍காவிட்டால், 95 சதவீத இறப்புகள் ஏற்படும் என்றும் எச்சரிக்‍கட்டுள்ளது.

அறிகுறி -  காய்ச்சல், எடை இழப்பு,  குருதிச்சோகை, கல்லீரல்-மண்ணீரல் வீக்கம் சோர்வு, தோலில் புண்-தடிப்புகள்,ஆகியவை கருங்காய்ச்சலின் அறிகுறிகள் என கூறப்படுகின்றன. 

இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்,  உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய அவர், கருங்காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்‍க நடவடிக்‍கை எடுக்‍கப்பட்டு வருவதாகவும், கருங்காய்ச்சலை ஒழிக்க மத்திய அரசு தீவீரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

English Summary

The next killer ..! - Ebony 'Kala Azhar' spreading fast ..!

Latest Articles

KOLNews