KOLNews

அச்சுறுத்தும் ‘ஒமிக்ரான்’ வைரஸ்..! - உலக சுகாதார அமைப்பின் குரலுக்கு காது கொடுங்கள் ..!

கொரோனாவை கட்டுப்படுத்த நாடெங்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு, மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில், அதற்கு பலனாக பெருமலாவது கொரோனா தொற்றுக்குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் தருவாயில், தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கியுள்ளது.

உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தும் விதமாக தோன்றியுள்ள இந்த தொற்று, எளிதில் பரவக்கூடியது என்றும் தடுப்பூசிகள் இதனை கட்டுப்படுத்தாது என்கிற தகவலும் மேலும் பீதியை கிளம்புவதாக உள்ளது.

Download (PDF/Epub) - Rich Countries In Southeast Asia

இந்நிலையில், புரூணை, மியான்மர், கம்போடியா, திமோர், இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என உலக சுகாதர அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தென் கிழக்கு ஆசியவுக்கான உலக சுகாதார அமைப்பு, பண்டிகைகள், மற்றும் பிற கொண்டாட்டங்களில் அனைத்து வித முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன், நாடுகள் கண்காணிப்பு மற்றும் மரபணு வரிசைப்படுத்தலை அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

WHO declares Covid-19 a pandemic | BusinessMirrorஏற்கனவே கடத்த சில மாதங்களுக்கு முன்பு, வளர்ந்த நாடுகள் 2 டோஸ் தடுப்பூசிகளுக்கு பின் மூன்றாவதாக 'பூஸ்டர் பேக்' என 3வது தடுப்பூசியை துவக்கிய நிலையில், இன்னும் ஒன்றேகால் சதவீகிதம் கூட தடுப்பூசி செலுத்தப்படாத ஆப்ரிக்க நாடுகள் உள்ளன. வறுமையின் காரணமாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்துகொள்ள முடியாத அந்த நாடுகளுக்கு, வளர்ந்த நாடுகள் தடுப்பூசிகளை  கொடுத்து உதவ வேண்டுமென்றும், அப்படி செய்யாமல் போகையில், ஆப்ரிக்க நாடுகளிலிருந்து அதிகரிக்கும் கொரோனா மீண்டும் எதோ ஒரு விதத்தில் பரவி உலக நாடுகளை பாதிக்கும் என எச்சரித்தது. 

How COVID-19 pandemic affected South Africa - International Affairs

ஆனால், காற்றில் விடப்பட்டது  உலக சுகாதார நிறுவனத்தின் வேண்டுகோள்.

இந்நிலையில், ஆப்ரிக்காவில் இருந்து  ‘ஒமிக்ரான்’ பரவி மும்பை வரை வந்துவிட்டதாக தகவல். பெங்களூரில் சோதனைக்காக 20 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் .

ஆக,  நிலைமையை உணர்ந்து அரசும் , மக்களும், உலக நாடுகளும் நடந்துகொள்ளாவிட்டால் நிலைமை கையை மீறிப்போய்விடும் என்பதே உண்மை. 

English Summary

Threatening 'Omicron' virus ..! - Listen to the voice of the World Health Organization ..!

Latest Articles

KOLNews