KOLNews

ஞானம் பெற.. ஒரு கேள்வி போதும்..!

ஞானம் பெற பல ஆன்மீகவாதிகள், தேடல் என்கிற பெயரில் பல புத்தகங்களை வாசிப்பதும், ஊர் ஊராக சென்று ஞானிகளை சந்திப்பதும், தியானத்தில் ஈடுபடுவதுமாக இருப்பார்கள். ஆனால் ஞானம் அப்படி தேடிதிரிபவர்களுக்கு தான் கிடைக்கவேண்டும் என்று இல்லை. ஒரு சிறு சம்பவம், பிறரிடமிருந்து வரும் ஒரு வாக்கியம் கூட சிலருக்கு ஞானத்தை தந்துவிடும். 

குருநானக்  மிகவும் கருமியான ஒரு பணக்காரனிடம் ஒரு குண்டூசியைக் கொடுத்து, 'அடுத்த ஜென்மத்தில் இதை என்னிடம் மறக்காமல் கொடு' என்றார்.

குழப்பிய பணக்காரன்,  'இதை எப்படி என்னால் அடுத்த ஜென்மத்தில் இருப்பித் தர முடியும் ?. என்றான்.

குருநானக் கனிவான புன்னகையுடன், இந்தக் குண்டுசியையே உன்னோடு எடுத்துச் சென்று திருப்பி கொடுக்க  முடியாது என்றுநினைக்கிறாயே . அப்படியானால் எந்த எண்ணத்தில் இவ்வளவு பணத்தையும் உன்னோடு கட்டிக் காக்கிறாய் ?, எனக் கேட்டார். 

வெட்கப்பட்ட அந்த பணக்காரன் அடுத்த நிமிடமே, தன் சொத்துக்களை தர்ம காரியங்களுக்கு எழுதி வைத்துவிட்டான் . 

English Summary

To gain wisdom .. one question is enough ..!

Latest Articles

KOLNews