KOLNews

புதிய பொறுப்பில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்..! - மகிழ்ச்சியில் பாஜக

உலக அளவில் இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஒரு மதவாதக் கட்சியாகவும் ,அதன் தாய் நிறுவனமான ஆர்எஸ்எஸ் ஒரு மதவாத இயக்கமாகவும் ஒரு சாராரால் விமர்சிக்கப்படும் நிலையில்,  அதே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பின்புலத்திலிருந்து வந்து,  தற்போது மத்திய அமைச்சராக உள்ள ஹர்ஷவர்தன், இன்று உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். 

இது ஆர்எஸ்எஸ் தொடர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக குழுவுக்கான தலைவர் ஆண்டுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவார். அந்த வகையில் நடப்பு ஆண்டில் நிர்வாக குழு தலைவர் பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இதன் தலைவராக இரு தினங்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக , உலக சுகாதார நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள 196 நாடுகள் இதற்கு முன்னதாக ஒப்புதல் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் காணொளி வாயிலாக ஹர்ஷவர்தன் உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இதன்மூலம் ஹர்ஷவர்தன் 34 உறுப்பினர்களை கொண்ட நிர்வாகக் குழுவுக்கு அடுத்த ஓராண்டுக்கு தலைவராக இருப்பார். உலக சுகாதார நிறுவனத்தின் முக்கியமான கொள்கைகள் குறித்து முடிவெடுப்பதில் பங்காற்றுவதுடன், ,  ஆண்டுக்கு இருமுறை நடக்கும் கூட்டத்திற்கு தலைமை வகிக்க வேண்டிய  பொறுப்பும்  அவருக்கு உள்ளது.

English Summary

Union Minister Harshvardhan in new Post - BJP in happiness

Latest Articles

KOLNews