KOLNews

உபி. பாலியல் வன்கொடுமை சம்பவம்.! - சி.பி.ஐ., விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராசில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரிழந்த சம்பவம் தேசமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் பகுதியில்  பாலியல் வன்முறைக்கு ஆளானதாக கூறப்பட்ட பட்டியல் இனப்பெண் உயிரிழந்த சம்பவத்தில், சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைத்தது. அத்துடன் , இந்த வழக்கை உச்சநீதிமன்ற கண்காணிப்புடன் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு கோரியிருக்கிறது. இந்த வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டது. ஒரு வாரத்துக்குள் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

அதையடுத்து, மாநில  அரசின் பரிந்துரையை ஏற்று, ஹத்ராஸ் சம்பவம் பற்றி விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சி.பி.ஐ.,ஹத்ராஸ் சம்பவம் பற்றிய விசாரணையை, தற்போது துவக்கியுள்ளது.

English Summary

UP Incident of sexual harassment.! - Central Government Order for CBI Inquiry

Latest Articles

KOLNews