KOLNews

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு..! - முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தோர் கவனத்திற்கு..!

ஆண்டுதோறும் ஐஏஎஸ்,  ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில்  குடிமைப் பணித் தேர்வுகள் (சிவில் சர்வீசஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதில் முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.

அந்தவகையில் இந்த வருடம்  796 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத்தேர்வு கொரோனா தாக்கம் காரணமாக  ஒத்திவைக்கப்பட்டு பின் கடந்த அக்டோபர் 4ம் தேதி நடத்தப்பட்டது. மொத்தம் 2569 மையங்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதிய இத்தேர்வை தமிழகத்தில் இருந்து மட்டும் 40 ஆயிரத்திற்கும்  எழுத்தியுள்ளனர்.

இந்நிலையில் முதல்நிலைத் தேர்வுகளுக்கான முடிவுகளை யுபிஎஸ்சி கடந்த வெள்ளியன்று வெளியிட்டது.இத்தேர்வில் தேர்ச்சியடைந்த 10566 பேருக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு அக்டோபர் 28 முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், டிசம்பர் முதல் வாரத்தில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு யுபிஎஸ்சி இணையத்தளத்தை பார்க்கவும்.

English Summary

UPSC Primary Exam ..! - Attention ..those who have passed the first level !

Latest Articles

KOLNews