KOLNews

தடுப்பூசி அவசியம் போட்டுக்கொள்ளவேண்டும்..! - ஒலிம்பிக் பங்கேற்பாளர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்..!

வரும் ஜூலை 24 துவங்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க செல்லும் வீரர்கள் , அவர்கள் உடன் செல்வோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளார் . 

முன்னதாக டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவின் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி,  ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தடகள வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார் . 

அப்போது, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற தடகள வீரர்கள் , அவர்களுடன் செல்லும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்ததாகவும் . ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்தியா சார்பில் 100 தடகள வீரர்கள் பங்கேற்பதற்கு தகுதி படைத்துள்ளனர் . மேலும் 25 தடகள வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Vaccination is essential ..! - PM instructs Olympic participants ..!

Latest Articles

KOLNews