தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிவிட்டு, அதனால் படும் இன்னல்கள் குறித்து அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், மீட்பு மற்றும் வசூல் உள்ளிட்ட பணிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மீறியதற்காக புனேவின் பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ .2.5 கோடி அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
"கடிதம் மற்றும் நோக்கத்தில்" நியாயமான நடைமுறைகளுக்கு முழுமையாக இணங்குவதை உறுதி செய்வதற்காக ஏற்படயத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மீறியுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஜாஜ் நிறுவனம் மேற்கொண்ட மீட்பு மற்றும் வசூல் முறைகள் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தன, என கூறும் ரிசர்வ் வங்கி, இதுபோன்ற செயலுக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்று நிறுவனத்திற்கு ஒரு ஷோ - காஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
நோட்டீஸுக்கு நிறுவனம் அளித்த பதில்களை பரிசீலித்தபின், ரிசர்வ் வங்கி, தனது வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இணங்காத குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, பண அபராதம் விதிக்க முடிவு செய்தது.
English Summary
Violate recovery procedures.? Bajaj Finance fined Rs 2.5 crore