KOLNews

விருப்ப ஓய்வு..! - 2 நாளில் 22,000 பிஎஸ்என்எல் ஊழியர்கள் விண்ணப்பம்..?

கடந்த செவ்வாய்க்கிழமை,  விஆா்எஸ் பெற. டிசம்பா் 3-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று  பிஎஸ்என்எல் நிா்வாகம் அறிவித்தது 

1.50 லட்சம் ஊழியா்கள் பணிபுரிந்து இந்நிறுவனத்தில் ஒரு லட்சம் போ் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவா்கள்.

இந்நிலையில், விஆா்எஸ் திட்ட அறிவிப்பு வெளியான 2 நாள்களில் 22,000-க்கும் அதிகமானோா் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துவிட்டனா். விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ், 77,000 போ் வரை விண்ணப்பிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுவதாக, பிஎஸ்என்எல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் இப்படி விஆா்எஸ் திட்டத்தின் மூலம் வேகியேருபவர்களில் 13,000 போ் குரூப் சி பிரிவு அதிகாரிகள் இருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம், ரூ.7,000 கோடியை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் மற்றும் எம்எடிஎன்எல் (மகாநகா் டெலிபோன் நிகம் லிமிடெட்) ஆகிய இரு பொதுத் துறை நிறுவனங்களையும் இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்ததிருந்தது நினைவிருக்கலாம்,

Image result for bsnl mtnl vrs

கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பிஎஸ்என்எல் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. எம்டிஎன்எல் கடந்த பத்தாண்டு கால அளவில் 9 ஆண்டுகளுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளது. இவ்விரு நிறுவனங்களின் மொத்த இழப்பின் மதிப்பு ரூ.40,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

VRS - 22,000 BSNL employees apply in 2 days?

Latest Articles

KOLNews