KOLNews

இந்தியாவின் ஒரு இன்ச் இடத்தை கூட சீனாவுக்கு விட்டு தரமாட்டோம் ..! - அமித்ஷா திட்டவட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்தியப் பகுதியின் ஒரு இஞ்ச் இடத்தைக் கூட சீனாவுக்கு விட்டு தர மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அந்த பேட்டியில், பல தரப்பட்ட அரசியல் விவகாரங்கள் குறித்து விவகாரங்கள்  பேசிய அமித் ஷா சீன குறித்த கேள்வி ஒன்றிற்கு, 'இந்தியப் பகுதியின் ஒரு இஞ்ச் இடத்தைக் கூட சீனாவுக்கு இந்தியா விட்டுத் தராது. எல்லா நாடுகளும் போருக்குத் தயார் தான். எந்த வகையில் வரும் எதிர்ப்புக்கு பதிலளிப்பதற்காக ராணுவத்தை பராமரித்துவருவதற்கான காரணம் அதுதான். குறிப்பிட்ட யாரின் கருத்துக்கும் இதை நான் பதிலாக கூறவில்லை. ஆனால், இந்தியாவின் பாதுகாப்புப் படை எப்போதும் தயார்தான். இரு நாட்டு ராணுவங்களும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டுதான் இருக்கின்றன.

அதே போல, அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்புகளும் திறந்துதான் உள்ளன. இந்த நாட்டின் உள்துறை அமைச்சராக இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிப்பது தொடர்புடையதாக இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால், பிரதமர் மோடியின் வார்த்தைகளை திரும்பக் கூறுகிறேன். நாங்கள் பாதுகாவலர்ளாக இருக்கிறோம். நம்முடைய பகுதியின் ஒரு இன்ச் நிலத்தைக் கூட யாராலும் திருட முடியாது; என தெரிவித்தார் . 

அண்மையில் ராணுவ வீரர்களிடையே பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், போருக்குத் தயாராக இருங்கள்’ என்று தெரிவித்திருந்த நிலையில் அமித் ஷாவின் இந்த பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது..

English Summary

We will not give even an inch of India's space to China ..! - Amitsha stubborn

Latest Articles

KOLNews