KOLNews

தெய்வ நம்பிக்கை குறித்து மகாத்மா என்ன நினைத்தார்..?

சராசரி மனிதனுக்கு தெய்வ நம்பிக்கை இருந்தாலும், துன்ப காலத்தில் அதில் சந்தேகம் வருவதும் உண்டு. ஒரு முறை  இஸ்லாமிய கல்லூரியை சேர்ந்த ஒரு பேராசிரியர் இது குறித்து விஷயமாக காந்தயிடம் இரு கேள்விகள் கேட்டார் 

அவர் கேட்ட முத்த கேள்வி  -  தங்களுக்கு தெய்வ நம்பிக்கை உண்டு என்பது எனக்குத் தெரியும் அந்த நம்பிக்கைக்கு அடிப்படை என்ன.. அது குறித்து உங்களுடைய அனுபவம் என்ன..?  

அந்த கேள்விக்கு பதிலளித்த காந்தி பின்வருமாறு கூறினார்...

இது எக்காலத்திலும் வாதத்திற்கு காரணமான ஒரு விஷயமாக இருக்க முடியாது.  இதைப்பற்றி வாதத்தின் மூலம் மற்றவர்களை நான் திருப்தி செய்ய வேண்டும் என நீங்கள் விரும்பினால் நான் தோல்வி அடைந்தவன் ஆவேன் ஆனால் இது மாத்திரம் உங்களுக்கு நான் கூறமுடியும். நீங்களும் நானும் இப்போது இந்த அறையில் உட்கார்ந்து கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ  அதைகாட்டிலும் கடவுள் இருக்கிறார் என்பது அதிக நிச்சயமாகும் 

Image result for worshipping lord rama

நான் நான் காற்று இல்லாமலும் தண்ணீர் இல்லாமலும் இல்லாமலும் உயிர் வாழலாம் ஆனால் கடவுள் இல்லாமல் நான் வாழமுடியாது என்பதை நான் உறுதியாக கூறமுடியும் . என் கண்களை நீங்கள் பிடுங்கி விடலாம் அதனால் நான் இறந்து விட மாட்டேன் அது போலவே நீங்கள் என் மூக்கை அறுத்து விடலாம் அதுவும் என்னை கொன்று விட முடியாது ஆனால் கடவுளிடத்தில் எனக்குள்ள நம்பிக்கையை நீங்கள் சிதைத்துவிட்டால்  நான் இறந்தவனாவேன்  இதை நீங்கள் மூட நம்பிக்கை என்றும் கூறலாம் எனது குழந்தைப் பருவத்தில் எனக்கு ஏதாவது பயமோ அல்லது ஆபத்தோ நேர்வது ஆக இருந்தபோது நான் ராம நாமாவை எப்படி தழுவிக் கொள்வது வழக்கம் அதுபோலவே இந்த மூட நம்பிக்கையும் நான் தழுவி கொண்டிருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன் 

பேராசிரியரின் அடுத்த கேள்வி - உங்கள் வாழ்க்கையில் அந்த மூட நம்பிக்கை அவசியமானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?

காந்தியின் பதில் - ஆமாம் நான் உயிர் வாழ்வதற்கு அது அவசியமானது.

( ஹரிஜன் 14 -05- 1938)

English Summary

What did Mahatma think of the Deity?

Latest Articles

KOLNews