KOLNews

ஏடிஎம் மோசடியை தடுக்க எடுக்கும் முயற்சி சிக்கலை ஏற்படுத்துமா..? - மூளையை கசக்கும் வங்கிகள்..!

மோசடியாக ஒருவர் கணக்கில் உள்ள பணத்தை ஏடிஎம் கார்டுகளைக் கொண்டு அபகரிப்பதை தடுக்கும் வகையில் பல யோசனைகளை முன்வைக்கப்படுகின்றன.

முன்னதாக புது தில்லியில் வங்கிக் கூட்டமைப்புகள் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஏடிஎம் மோசடிகளைக் குறைக்க, ஏடிஎம்மில் இரண்டாவது முறை பணமெடுக்க 6 - 12 மணி நேரம் இடைவெளி நிர்ணயிக்க வங்கிகள் பரிசீலனை செய்துள்ளன.

பொதுவாக ஏடிஎம் மோசடிகள் நள்ளிரவில் நடப்பதால்  முதல் முறை பணம் எடுப்பதற்கும், இரண்டாவது முறை பணம் எடுப்பதற்கும் இடையே 6 - 12 மணி நேரம் இடைவெளி விதிக்கப்பட்டால் மோசடிகள் குறையும் என்று ஓரியண்டல் வர்த்தக வங்கியின் மூத்த செயல் அதிகாரி தெரிவித்தாக தெரிகிறது.

கிட்டத்தட்ட 18 வங்கிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றஇந்த  கூட்டத்தில் இந்த திட்டம் ஆலோசிக்கப்பட்ட நிலையில், ஒரு வேளை இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஏடிஎம்களைப் பயன்படுத்தி பணம் எடுக்க முடியாமல் போகும் நிலையம் வரலாம் என சொல்லப்படுகிறது.

ஆலோசனை கூட்டத்தில் இது போன்று பல திட்டங்கள் முன் வைக்கப்பட்டது. அதில், ஏடிஎம்மில் பணமெடுக்கும் போது, பணப்பரிமாற்றம் செய்யும் போது நடைமுறையில் இருப்பது போன்று செல்போனில் ஒன் டைம் பாஸ்வேர்ட் அனுப்பி பதிவு செய்வது என்ற விதியும் பரிசீலிக்கப்பட்டதாம்.

 அதே போல, ஏடிஎம் மையங்களில் ஹெல்மெட்டுடன் யாராவது உள்ளே நுழைந்தால், ஆடியோ மூலம் ஹெல்மெட்டைக் கழற்றுமாறு அறிவிக்கலாம். இதனை செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் என்ற பயம் திருடர்களுக்கு ஏற்படும் என ஒரு யோசனையும் சொல்லப்பட்டதாம்.

English Summary

Will the effort to prevent ATM fraud cause trouble? - Thinking banks ..!

Latest Articles

KOLNews