KOLNews

போதை பழக்கத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்களின் மனைவியர் ..! - நடிகை ஷெர்லின் சோப்ரா பகீர் தகவல்..!

பிரபல பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா, நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண சென்று இருந்ததாகவும், போட்டி முடிந்த பின்னர் அங்குள்ள விருந்து நிகழ்ச்சிக்கு தான் அழைக்கப்பட்டதாகவும் அந்த விருந்தில் பிரபல கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மனைவியுடன் கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 

அத்துடன் விருந்து நடுவே அங்கிருந்த குளியலறைக்கு தான் சென்றபோது கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் 'கொக்கைன்' எனப்படும் போதைப் பொருட்களை பயன்படுத்திக் கொண்டு இருந்ததைக் கண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தனக்கு சம்மன் அனுப்பினால் அவர்களுக்கு உதவ தான தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஷெர்லின். 

ஏற்கனவே பாலிவுட் நடிகர் சுஷாந்த்தின்  மரணம் தொடர்பான விசாரணையின் நீட்சியாக அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மற்றும் நடிகையின் சகோதரர் உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவாகியுள்ளது.. அதன் விசாரணை நடந்து வரும் நிலையில் நடிகை ஷெர்லினின்  இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

English Summary

Wives of famous cricketers addicted to drugs ..! - Actress Sherlyn Chopra Information ..!

Latest Articles

KOLNews