KOLNews

பெண் டாக்டர் கொலை..! தெலுங்கானாவில் வலுக்கும் போராட்டம்..!

கடந்த வாரம், 4 பேர் கொண்ட கும்பலால் ஐதராபாத்தை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் கொலை செய்யப்பட்டார். எரிந்த நிலையில் அவரது உடல் மறுநாள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இதில் ஈடுபட்ட லாரி ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து,அவர்கள் செர்லாபள்ளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக விரைவு கோர்ட்டு அமைக்கப்படும் என்று தெலுங்கானா மாநில முதல்-மந்திரி கே.சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

Image result for student protest on Woman doctor killed ..! Telangana

இதனிடையே , இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் என்ற ஆர்.எஸ்.எஸ். ஆதரவு மாணவர் அமைப்பு சார்பில் பல்வேறு கல்வி நிறுவன மாணவர்கள் பங்கேற்ற பேரணி நேற்று ஐதராபாத்தில் நடந்தது.

அதில் கலந்துகொண்டவர்கள், குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்றும், நீதி வேண்டும் என்றும் கோஷமிட்டபடி சென்றனர்.

தெலுங்கானா வக்கீல்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பிழும், பல மாணவர் அமைப்புகள் சார்பிலும்  போராட்டங்கள் நடந்தன.

இதற்கிடையே, இவ்வழக் கில் கைதான 4 பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்நகர் கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்குமாறு கோருவோம் என்று தெலுங்கானா போலீஸ் டி.ஜி.பி. மகேந்தர் ரெட்டி தெரிவித்தார்.

English Summary

Woman doctor killed ..! Struggle in Telangana strengthening !

Latest Articles

KOLNews