KOLNews

ஜெய்ப்பூரில் உருவாகும் உலகின் 3 ஆவது பெரிய கிரிக்கெட் மைதானம்..!

75 ஆயிரம் இருக்கைகள் கொண்ட உலகின் மூன்றாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் கட்டப்பட உள்ளது.

இதற்காக கிராமத்தில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 4 மாதங்களில்  கட்டட பணிகள் துவக்கப்பட உள்ள நிலையில் இரண்டு வருடங்களுக்குள் மைதானம் தயாராகி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

இந்த மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சி அகாடமி, உலகத்தரத்தில் பெவிலியன் ஸ்டாண்டுகள், கார்ப்பரேட் பெட்டிகள், மற்றும் பசுமையான மைதானம் என சிறப்பாக உருவாக உள்ளது.

அத்துடன் பயிற்சிக்காக உள்விளையாட்டு அரங்கங்கள் , பத்திரிகையாளர் பகுதி என அனைத்துமே உள்ளடக்கியதாக இந்த கிரிக்கெட் மைதானம் அமையவுள்ளது.

ஜெய்ப்பூரிலிருந்து 25 கிமீ தொலைவில் சொம்ப் என்னும் ஜெய்ப்பூர் - டெல்லி நெடுஞசாலையயை ஒட்டிய கிராமத்தில் அமைகிறது இந்த மைதானம். 

English Summary

World's 3rd largest cricket ground in Jaipur

Latest Articles

KOLNews