KOLNews

தம்பி உனக்கு..அண்ணன் எனக்கு ..! - மகளின் மைத்துனரை மணந்த தாய்..!

37 வயதான அந்த பெண் , தனது மகளின் மைத்துனரை, அதாவது மருமகனின் மூத்த சகோதரரான 22 வயதான இளைஞரை திருமணம் செய்துள்ளார்.

கணவனிடம் இருந்து  விவாகரத்து வாங்கிய பெண் ஒருவர் தனது மகளின் கணவரின் அண்ணனை மீண்டும் திருமணம் செய்ததுடன், பாதுகாப்பு கோரி  நீதிமன்றம் சென்றுள்ள சம்பவம் பஞ்சாப்பில் அரேங்கேறியுள்ளது.

அண்மையில், தனது 18 வயது மகளுக்கு குர்தாஸ்பூரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். இளம் புதுமண தம்பதிகள் வாழ்க்கையை தொடங்கிய நிலையில், மீண்டும் தனது வாழ்க்கையை புதுப்பிக்க ஆரம்பித்துள்ளார் அந்த தாய்.

பெண்ணின் 37 வயதான தாயாரும், கணவரின் 22 வயதுடைய மூத்த சகோதரரும் பதான்கோட்டில் பணிபுரிந்து வந்தபோது அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். 

ஆகவே, அந்த பெண் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த புதன்கிழமை (அக்டோர் 2, 2019) மாலிக்பூரில், தன்னை விட 15 வயது இளையவரும், தனது மருமகனின் மூத்த சகோதரரும், தனது மகளின் மைத்துனரை மணந்தார்.

ஆனால் இருவர்களின் காதல் திருமணம் குறித்த செய்தியை அவரது மகளுக்கு தெரியாமல் இருந்துள்ளது. 

இந்நிலையில், தனது தாய் தனது மைத்துனருடன் அவர் வசித்த வீட்டிற்கே வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

இந்த சம்பவம் கடந்த 14 ஆம் தேதி அனைவர்க்கும் தெரியவந்ததையடுத்து இரு குடும்பத்தினரும் இவர்களின்  திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

எதிர்ப்பை பற்றி கவலைப்படாத தம்பதியினர் , தங்கள் இணைந்து குடும்ப நடத்த ஏதுவாக குடும்பத்தினரிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென இருவரும் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர். 

தற்போது இந்த வழக்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.

 37 வயதான பெண் தன்னை விட 15 வயது குறைந்த இளைஞனை,  அதுவும் தனது மகளின் மைத்துனரை திருமணம் செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களின் பேசும்பொருளாக மாறியுள்ளது.

English Summary

Younger for you .. Elder for me ..! - woman married Daughter's Brother-in-law

Latest Articles

KOLNews