KOLNews

சுபாஷ் சந்திரபோஸின் இலக்கை நோக்கி இளைஞர்கள் செயலாற்ற வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

சுபாஷ் சந்திரபோஸின் இலக்கை நோக்கி இளைஞர்கள் செயலாற்ற வேண்டும் என பிரதமர்  நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆண்டுதோறும், புத்தாக்கம், கல்வி, விளையாட்டு, கலை-கலாச்சாரம், சமூக சேவை, தீரச் செயல்கள் ஆகிய 6 துறைகளில் சாதனை புரியும் 18 வயதுக்‍கு குறைவான சிறார்களுக்‍கு "பால புரஸ்கார் " என்கிற பெயரில் விருது வழங்கப்படுகிறது. 

அந்த வகையில், நேற்று நடைபெற்ற இந்த ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது வழங்கும்  விழாவில் காணொலி மூலம் கலந்துகொண்ட பிரதமர் மோடி, 14 சிறுமிகள் உட்பட 29 பேருக்‍கு விருதுகளை வழங்கி உற்சாகமூட்டினார். அப்போது பேசிய அவர், நாட்டுக்கு உழைப்பதே முதன்மையானது என்ற சுபாஷ் சந்திரபோஸின் இலக்கை நோக்கி இளைஞர்கள் செயலாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு, தூய்மை இந்தியா திட்டத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கும் சிறார்கள், தங்களை சுற்றியுள்ள மக்களிடம் உள்ளூர் தயாரிப்புகளை பயன்படுத்துமாறு ஊக்கப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

அத்துடன், உலகின் அனைத்து பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக இளம் இந்தியர்கள் இருப்பதை பார்க்கும் போது பெருமையாக இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

English Summary

Youth should work towards Subhash Chandra Bose's goal - Prime Minister Narendra Modi's request

Latest Articles

KOLNews