குழந்தை தள்ளாடி நடக்க ஆரம்பிக்கும்போது வெறும் காலுடன் நடப்பது பாதுகாப்பாக அமையும். ஏனெனில் அவன் கால்கள் தரையில் இருந்து சரியான உணர்ச்சிகளை பெறும். அப்பொழுது அவன் கால் விரல்கள் கீழே விழாமல் இருக்க உதவுகின்றன. குழந்தை காலணி இல்லாமல் நடப்பது. பாதம், கணுக்கால், கால் தசைகள், பாத வளைவு போன்றவற்றை வலுவடையச் செய்கின்றன.

குழந்தை பிறரையோ அல்லது ஏதாவது ஒன்றையோ பிடித்துக் கொள்ளாமல் நடக்க ஆரம்பிக்கும் வரையில் அதற்கு காலணிகளை அணியாதீர்கள். இந்த நிலையில் காலணிகள் குளிர்ச்சியிலிருந்து வேண்டிய வெப்பம் பெறவும்,சுர சுரப்பான தரைகளில் இருந்து பாதுகாப்புப் பெறவும் உதவி செய்கின்றன. காலணிகள் குழந்தைக்கு சரியாகப் பொருந்துகின்றனவா என்று எப்பொழுதும் சரிபாருங்கள்.

மென்மையான காலணிகள் அல்லது கேன்வாஸ் காலணிகள் காலணிகளை அணிய தொடங்குவது குழந்தைகளுக்கு மிகச் சிறந்தது. காலணிகள் கணுக்கால் வரையில் இருப்பது பொதுவாக நல்லது. ஏனெனில், அது கணுக்காலுக்கு பலம் கொடுக்கும்.
English Summary
Can the baby wear boots ..? - Attention young mothers