KOLNews

கொத்துமல்லி துவையல்..!

சாம்பார் சாதமாகட்டும், அல்லது இட்லி, தோசை போன்ற டிபனாகட்டும், அவற்றிற்கு கொத்துமல்லி  துவையல் ஒரு சரியான சைட் டிஷ். அத்துடன் பித்தத்தை போக்கும் தன்மையுடையது. 

இதனை செய்வது எப்படி என பார்ப்போம்..

தேவையான பொருட்கள் :

தேங்காய் - 3 பத்தை. கொத்துமல்லி 1 கட்டு, பச்சை மிளகாய் - 4, புளி - 1 கோலிகுண்டு அளவு, உப்பு -  தேவையான அளவு, கடுகு - தேவையான அளவு,  உபருப்பு - ஒரு கைப்பிடி,  பெருங்காயம் - தேவையான அளவு,  எண்ணெய் - தாளிக்க தேவையானது, கறிவேப்பிலை - தாளிக்க தேவையானது. புளி - விரல் நுனி அளவு.

செய்முறை -  தேங்காயை அரிந்து கொண்டு, மல்லி இலைகளைச் சுத்தம் செய்து, கழுவிக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து அரிந்த தேங்காயை போட்டு வதக்கவும். மல்லி இலை வதங்கியதும் மீதமுள்ள மசாலாக்களையும் அத்துடன் வதக்கி, புளியையும் சேர்த்து  தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் அரைத்து உடனே பரிமாறலாம்.

புளி சேர்ப்பதால், காலையில் செய்ததை இரவு வரை தாராளமாக உபயோகிக்கலாம். கெட்டு போகாது.

English Summary

Coriander bath ..!

Latest Articles

KOLNews