இளம் வயதிலேயே குண்டாகிவிடுவது இன்றைய ஆண்களில் பலருக்கு ஏற்படும் ஒரு சௌரிய குறைச்சல் தான். குறிப்பாக தங்கள் பருமனை மறைக்க விருப்பினாலும், அதற்காக மெனக்கெட போதிய நேரம் கிடைப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய உடைகள் மீது சற்று கவனம் செலுத்தினால் உடல் குண்டாக தெரிவதை ஓரளவு தவிர்க்கலாம்.
குண்டான ஆண்கள், இடுப்புக்கு கீழே வரும்படி ஆடைகளை அணியுங்கள். எடை குறைந்த ஆடைகள் குண்டான இடுப்பை ஓரளவு குறைத்துக் காட்டும்.

அதே போல, உடையின் மேல் பகுதி மற்றும் அடிப்பகுதியை பல்வேறு டிசைன்களில் இருக்கக்கூடாது. ஒரே நிறத்தில், டிசைன்களுடன் இருக்கலாம். கருப்பு நிற உடைகள்தான் உடல் எடையை குறைத்து காட்டும். அதனால் குண்டானவர்கள் முடிந்த அளவு கருப்பு நிற குடைகளை பயன்படுத்தலாம். கெட்டியான காட்டன் உடைகளை அணிவதை தவிர்த்துவிடுங்கள். மெல்லிய பாலியஸ்டர் உடைகள் வாங்கலாம்.

கட்டம் போட்ட அல்லது குறுக்காக கோடுகள் போட்ட டிரஸ்களை மேலும் குண்டாக காட்டும்.. நீளவாக்கில் கோடுகள் உள்ள ஆடைகளை அணிந்தால் உடலை உயரமாக காட்டி, குண்டு உடல் குறைந்து போன தோற்றத்தைத் தரும்.
English Summary
Do you know how to dress to reduce men's obesity ..?