இந்த அவசர யுகத்தில் குங்கும போட்டுக்கு மாற்றாக ஸ்டிக்கர் பொட்டே நெற்றி பொட்டாகிவருகிறது எந்த கலர் உடைக்கு எந்த கலர் போட்டு மேட்சாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டால், உங்கள் முகத்தின் அழகு முழுமை பெரும். அதற்கான சில டிப்ஸ்
பச்சை நிற உடைக்கு கருப்பு கலர் போட்டு,
ரோஸ் கலர் உடைக்கு அதே கலர் போட்டு,
நீலம் கலந்த பச்சை டார்க் ப்ளூ உடைக்கு ப்ளூ கலர் போட்டு,
லைட் ரோஸ் லைட் ப்ளு நிற உடைக்கு கருப்பு கலர் போட்டு,

செம்பு (தாமிரம்) கலர் உடைக்கும் கருப்பு கலர் போட்டு,
ஆரஞ்சு மற்றும் கனகாம்பர கலர் உடைக்கு அதே கலரில் போட்டு,
லைட் வயலட் கலர் டார்க் வயலட் கலர் பொட்டு.
லைட் ரோசுக்கு அதே கலரில் போட்டு.
அதே போல,விழாக்களுக்கு செல்லும்போது எடுப்பாக தெரிய இதே கலரில் கல் அல்லது ஜிகினா வைத்த பொருட்களை பயன்படுத்தலாம்.
முக அமைப்புக்கு ஏற்ற பொட்டு -
விசாலமான நெற்றியைக் கொண்ட பெண்கள் பெரிய பொட்டு வைத்தால் நெற்றியின் அகலம் குறைந்தது போல அழகாக தெரியும். நெற்றி அகலும் குறைந்தவர்கள் இரண்டு புருவங்களுக்கும் இடையில் ஒரு சிறிய பொட்டு வைத்தால் எடுப்பாக தெரியும். அதே போல, சதுரமான முக வடிவம் வட்டமான முக வடிவம் கொண்டவர்கள் சற்று பெரிய வட்டவடிவமான பொட்டுகளை வைக்கவேண்டும்.

ஜீன்ஸ், டாப்ஸ், ஸ்கர்ட் ,மினி போன்றவற்றை அணியும் பெண்கள் பொட்டு வைக்காமல் இருப்பதே பெரும்பாலும் பொருத்தமானதாக இருக்கும். சிலருக்கு பொட்டு வைக்காமல் இருப்பது சாஸ்திர குறையாக தோன்றும் பட்சத்தில் சிறிதாக வைத்து கொள்ளலாம்.
English Summary
Do you know which Pottu is best for your face?