KOLNews

சுடச் சுட சாப்பிட.. சுருள் பராத்தா..!

இரவு நேர உணவிற்கு உகந்த ஒரு டிபன், சுருள் பராத்தா. அதை செய்வது எப்படி என பார்ப்போம்..

தேவையான பொருட்கள்..

 கோதுமை மாவு - அரை கப்,  மைதா மாவு - ஒன்றரை கப்   உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - தேவையான அளவு,  நெய் - தேவையான அளவு.  தண்ணீர் - தேவையான அளவு.

 செய்முறை

1.மாவுகளை உப்புச் சேர்த்து நன்கு கலக்கவும். சிறிது நெய் விட்டு பிசறிய பின், தண்ணீர் சேர்த்து மிருதுவாக ஆகும் வரை பிசையவும்.  சிறிது எண்ணெய் தடவி ஒரு மணி நேரம் ஊற விடவும்.

2.மாவை பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும்.

3. ஒரு மாவு உருண்டையை எடுத்து நீளவாக்கில் உருட்டவும்.

4. அதன் மீது உருக்கிய நெய் அல்லது எண்ணை தடவி வட்ட வடிவில் சுருள் சுருளாக உருட்டவும்.

5. சிறிது மேல் மாவு தூவி ஓரளவு கனமாக வட்ட வடிவில் பராத்தா இடவும்.

6.சூடான தோசை கல்லில் போட்டு இருபுறமும் வேக விடவும் பிறகு நெய் விட்டு வேக விடவும்.

7. நன்கு வெந்த சுருள் கல்லில்லிருந்து எடுக்கவும்.

8. சிறிது ஆறியதும் லேசாக இரு ககைகள் இடையே வைத்து தேய்க்க சுருள் சுருளாக பிரியும்.

9.  மற்ற மாவு உருண்டைகளையும் இதேபோல் அபராதமாக செய்யவும்.

10.  குருமாவுடன் பரிமாறவும்

English Summary

Hot..Spiral Paratha..!

Latest Articles

KOLNews