KOLNews

புட்டிபால் எப்படி ஊட்ட வேண்டும்..? - இளம் பெற்றோர் கவனத்திற்கு..!

பாலுடன் தாங்கள் காட்டும் அன்பும் அரவணைப்பும் குழந்தைக்கு மிக முக்கியமானவை. அணைத்து தாய்மார்களாலும் எல்லா நேரங்களிலும் தாய் பால் கொடுக்க முடியாததால், சமயங்களில் புட்டிப் பால் கொடுக்கலாம்.  குறிப்பாக தந்தை இந்த வேலையை செய்வதன் மூலம்,  மகிழ்ச்சி அடைவதுடன், அதன் மூலம் குழந்தைக்கு தனது அரவணைப்பை உணர்த்தலாம். 

Bottle-Feeding 101: How to Bottle-Feed a Baby

அப்படிப்பட்ட நேரங்களில் நாம் புட்டிப்பாலை எவ்வாறு ஓடுகிறோம் என்பது முக்கியமானது . புட்டி பால் ஊட்டும்  போது தலையை உங்கள் கைகளில் சாய்மானமாக குழந்தையை அமர்த்தி பாலூட்டுவதன் மூலம் பால் தொண்டையை அடைப்பதை தவிர்கலாம். எப்பொழுதும் குழந்தையின் தலையை மேல்புறமாக வைத்துக் கொள்ளுங்கள்.  

Bottle Feeding and Infant Formula

அதே போல், பால், ரப்பர் காம்பின் உள்ளே முழுவதும்,அதாவது புட்டியின் கழுத்துப்பகுதியில் நன்றாக நிரம்பும்படி பார்த்து கொள்ளுங்கள்.. இது காற்று உள்ளே புகாதவாறு தடுக்கும். புட்டிப்பால் குடிக்கும் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் குழந்தை போலவே ஏப்பம் விடும். சமயத்தில் ஒரு முறை முழுவதுமாக குடித்த பிறகும்  ஒரு முறையும் ஏப்பம் விடும். நீங்கள் ஒருபோதும் குழந்தை பாட்டிலை வாயில் வைத்து இருக்கும் போது தனியாக விடாதீர்கள். முக்கியமாக குழந்தை தூங்கும் போது புட்டி பாலூடன் விடாதீர்கள். அப்படி விட்டால் புரையேறி விடலாம். பின் தூக்கம் கெட்டுவிடும்.  தூக்கம் சுகமாக இருந்தாலே குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும். 

English Summary

How to feed bottled milk ..? - Attention young parents ..!

Latest Articles

KOLNews