KOLNews

அம்மா, அப்பா கனவில் வந்தால் ...இது தாங்க அர்த்தம்..!

நாம் கானும் கனவில் எந்த உறவினர் வந்தால் என்ன பலன் என தெரிந்துகொள்வதன் மூலம், நமது சில கனவுகள் கூறும் செய்திகளை நாம் புரிந்துகொள்ளலாம்.

இறந்தவர்கள்: - ஏற்கனவே இறந்தவர்கள்  உங்கள் கனவில் வந்தால், நீங்கள் நீண்ட காலம் வாழப் போகிறீர்கள் என்று பொருள். சில தொல்லைகள் தலைதூக்கி மறையும். இந்த கனவு காணும் சமயத்தில் நீங்கள் ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அது குணமாகும்.

தந்தை:- உங்கள் தந்தை உயிருடன் இருந்து அவர் உங்கள் கனவில் தோன்றினால், பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாய் நீங்கள் ஏதோ செய்யத் துடிக்கிறீர்கள் என்று பொருள். அது காதல் விவகாரம் ஆகவும் இருக்கலாம். ஆனால்,அந்த காரியத்தை நீங்கள் செய்தால் மோசமான விளைவுகள் ஏற்படும்.

Dream of Dead Father – Meaning and Symbolism

உங்கள் தந்தை இறந்து போனவராய் இருந்து உங்கள் கனவில் தோன்றினால், நீங்கள் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சனையை வெற்றிகரமாய் சமாளிக்கப் போகிறீர்கள் என்று பொருள். உங்களுடைய வாழ்க்கையிலும் ஒரு மலர்ச்சி உண்டாகும்.

தாய்: - உங்கள் தாய் உயிருடன் இருந்து அவர் உங்கள் கனவில் தோன்றினால், நீங்கள் முக்கியமான காரியங்களில் அலட்சியமாய் நடந்து கொள்கிறீர்கள் என்று பொருள்.உங்களுடைய காரியங்களை மற்றவர்கள் செய்து கொடுக்க வேண்டும் என்ற ஆசையும் உங்களுக்கு இருக்கிறது.

Dreams of a Deceased Mother - Learn Dream Interpretation

உங்கள் தாய் இறந்து போனவர் ஆய் இருந்து உங்கள் கனவில் தோன்றினால்,நீங்கள் இவ்வுலகில் நீண்ட காலம் வாழப் போகிறீர்கள் என்று பொருள்.இந்தக் கனவு காணும் சமயத்தில் நீங்கள் ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அது விரைவில் உங்கள் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறக்கும்.

English Summary

If mom and dad dream ... The meaning is this..!

Latest Articles

KOLNews