பிலிப்பைன்ஸில் சென்ற ஜனவரி மாதம் சியோமி நிறுவனத்தின் முதல் அண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் தயாரிப்பான ரெட்மி கோ, அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது இந்த ரெட்மி கோ தயாரிப்பை இந்தியாவில் வெளியிட சியோமி நிறுவனம் சார்பில் ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ரெட்மி கோ தயாரிப்பு இந்தியாவில் வரும் மார்ச் 19 ஆம் தேதி டெல்லியில் நடக்கும் ஒரு விழாவில் அறிமுகபடுத்தப்படலாம் என தெரிகிறது. சுமார் 12 மணிக்கு அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன், ஆரம்ப நிலை போனின் வசதிகளை மட்டுமே பெற்றிருக்கும்.
ஸ்னாப்டிராகன் 425 SoC, 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி சேமிப்பு வசதியை இந்த போன் கொண்டுள்ளது. இந்த புதிய போனின் அறிவிப்பை டிவிட்டரில் பதிவு செய்த சியோமியின் இந்திய தலைவர் மனு குமார் ஜெயின், ரெட்மி கோ ஒரு ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன் என குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய அம்சங்கள் -
கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளியாகும் ரெட்மி கோ!
இரண்டு வகை சேமிப்பு வசதி
3,000mAh பேட்டரி பவர்
ரெட்மி கோ விலை:
ரெட்மி 6 ஏ இந்தியாவில் ரூ.5,999க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ரெட்மி கோ ஸ்மார்ட்போன் ரூ.5,000க்கு குறைவான விலையிலையே விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.
வசதிகள் ..
5 இஞ்ச் ஹெச்டி திரை மற்றும் டூயல் சிம் கார்டு ஸ்லாட் வசதி என ஸ்மார்ட்போனின் அடிப்படை வசதியை இந்த ரெட்மி கோ பெற்றுள்ளது. குவாட்-கோர் குவல்கம் ஸ்னாப்டிராகன் 425 SoC மற்றும் 1ஜிபி ரேம் பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போன் 8 மற்றும் 16 ஜிபி சேமிப்பு வசதிகளுடன் அமைந்துள்ளது.
சியோமி நிறுவனம் இந்த போனில் 8 மெகா பிக்சல் பின்புற கேமராவும் செல்ஃபிக்காக 5 மெகா பிக்சல் கேமராவும் இருக்கும் .
கேமரா வசதிகளான ஹெச்டிஆர் மோட், பர்ஸ்ட் மோட் மற்றும் பல முக்கிய ஃபில்டர்கள் இந்த போனில் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு வசதியுள்ளதால் 128 ஜிபி வரை சேமிப்பு வசியை அதிகரித்துக் கொள்ளலாம்.
ப்ளூடூத் 4.1 கனெக்டிவிட்டி மற்றும் 3,000mAh பேட்டரி வசதியை கொண்டுள்ளது.,
English Summary
Redmi Go .. date notice!