KOLNews

உடல் வலிமைக்கு முளைத்த கடலை சுண்டல்..!

சாதாரண கொண்டைக்க்கடலையை விட முளை விட்ட கொண்டைக்க்கடலையை உண்பது உடல் வலிமையை மேலும் கூடும். குறிப்பாக பழங்காலத்திலிருந்தே உடற்பயிற்சி செய்பவர்களின் முக்கிய உணவாக இது இருந்து வருகிறது.

 தேவையான பொருட்கள் -

 (4 நபர்களுக்கு)

முளைவிட்ட கொண்டைக்கடலை  - 125 கிராம் 

கடுகு                                                       - 3 கிராம் 

காய்ந்த மிளகாய்                                - 3 கிராம் 

கறிவேப்பிலை                                      - 3 கிராம் 

எண்ணெய்                                             - 5 கிராம் 

உப்பு                                                         - சிறிதளவு 

செய்முறை - 

முளைவிட்ட கொண்டைக்கடலையை  சிறிதளவு உப்பு போட்டு,  குக்கரில் 4 5 விசில் வரை வேகவிட்டு நீரை வடிக்கவும்.  வடித்த நீரை வீணாக்காமல் சமையல் செய்யும்போது குழம்புடன் காய்களை வேக வைக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை, உளுந்து, மிளகாய் போட்டு சிவந்ததும், வேக வைத்த கடலையை போட்டு நீர் வற்றும் வரை கிளறி விட்டு, தேவையெனில் தேங்காய் துருவலை போட்டு இறக்கவும் .

இதில் கிடைக்கும் கலோரி 501,  ஒருவருக்கு கிடைக்கும் கலோரி 125.25.

English Summary

Sprouting kadalai for body strength ..!

Latest Articles

KOLNews