KOLNews

கோடையில் சுவைக்க..கொழுப்பில்லா அத்திப்பழ பாசுந்தி..!

பாசுந்தி பிரியர்களுக்கு அதை ரசித்து ருசித்தாலும், அதில் அதிக அளவில் கொழுப்பு உள்ளதே என்கிற சிறு தயக்கம்  இருக்கும். அவர்களுக்கு ஒரு நல்ல மாற்று அத்திப்பழ பாசுந்தி. மேலும் அது உடல்நலத்திற்கும் நல்லது.

அத்திப்பழ பாசுந்தியை எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம் ..

தேவையான பொருட்கள் - 

(4 நபர்களுக்கு)

 கொழுப்பில்லாத பால்                   - 200 கிராம்

 அத்திப்பழம்                                      - 100 கிராம் 

சோள மாவு                                         - 3 கிராம் 

கோவா                                                 - 25 கிராம் 

சர்க்கரை                                             - 15 கிராம் 

எலுமிச்சம் சாறு                                 - 3 அல்லது 4 துளிகள்

Anjeer (Fig) 1box

செய்முறை - 

சோள மாவை 2 ஸ்பூன் பாலில் கரைத்து தனியே வைக்கவும். மீத பாலை நன்கு காய்ச்சவும். பால் நன்கு கொதித்தவுடன் எலுமிச்சை சாரை ஒவ்வொரு துளியாக விட்டு நன்கு கிளறவும். பின்னர் சர்க்கரை கோவா போட்டு, கட்டியில்லாமல் கரைத்து வைத்துள்ள சோள மாவு கரைசலை சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்தவுடன் இறக்கி பிரிட்ஜில் குளிர வைக்கவும்.

அத்திப் பழத்தை பொடியாக நறுக்கி குளிர வைத்த பாலின் மேல் போட்டு பரிமாறவும்.

இதில் கிடைக்கும் மொத்த கலோரி 507 

ஒருவருக்கு கிடைக்கும் கலோரி 126.75

English Summary

Taste in the summer ..Athi fruit Basundi

Latest Articles

KOLNews