KOLNews

ஆதலினால் சேமிப்பீர் மக்களே..!

கொரானா நெருக்கடி காலத்தில், சுயதொழில் செய்யும் பலருக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாக வருமானம் இல்லாத சூழல் ஏற்பட்டால், அடுத்து வர இருக்கும் மூன்று மாதத்திற்கு 6 மாதத்திற்கு உங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு, அதாவது ஒரு குடும்பத்தை நடத்திச் செல்லும் அளவிற்கு சேமிப்பை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. 

நாம் இயல்பாகவே சேமிக்கும் சமூகம் தான். குடும்பதலைவிகள் தங்க நகைகளில் முதலீடு செய்வது ஆசையினால் மட்டும் அல்ல , அது ஒரு சேமிப்பும் என்பதால் தான்.

Schoolgirls in Bihar refuse to wear Gold Jewellery for Toilets

ஆனால், பொதுவாக ஒரு தனிநபர் எவ்வளவு  தொகையைச் சேமிக்க வேண்டும் என்ற புரிதல் பலருக்கு இருப்பதில்லை. குறிப்பாக உலகமயமாக்கலுக்கு பின் ஏற்பட்ட நுகர்வு கலாச்சாரத்தால் நம் வாழ்க்கை முறையில் பல தேவையற்ற மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. அதன் பலனை தற்போது கொரானா நெருக்கடியில் படித்த நடுத்தர வர்க்கம் சந்தித்து வருகிறது.

ஒருவர் தனது சேமிப்பை மேம்படுத்துவதற்கு மாத வரவு செலவு திட்டத்தை தயாரிக்க வேண்டும் சாதாரணமாக ஒவ்வொரு வீட்டிலும் தேவையில்லாத செலவீனங்கள் 10 சதவிகிதம் என்கிற அளவுக்கு இருக்கும். இந்த செலவினை குறைத்து, மிச்சமாகும் பணத்தை சரியான வகையில் முதலீடாக மாற்ற வேண்டும். 

உதாரணத்திற்கு ஒவ்வொரு மாதமும் 2000 ரூபாயை மிச்சப்படுத்த சேமிக்கத் தொடங்கி,  அதை, நல்ல முதலீடு என நீங்கள் நினைக்கும் திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என வைத்து கொண்டால், உங்களுக்கு ஆண்டுக்கு 12% வருமானம் என்கிற வகையில்,  10 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூபாய் 4.5 லட்சம் ஆக உயர்ந்திருக்கும்  இந்தத் தொகையில் ஒரு குறிப்பிட்ட இலக்கை நிறைவேற்ற போதுமானதாக இருக்கும். 

7 bad money habits to ditch today so you can spend less and save ...

கிரெடிட் கார்டு மற்றும் அதிக வட்டி கடன்களை ஏற்கனவே உள்ள சேமிப்பு தொகையை எடுத்து அடைத்துவிடலாம்.  இவ்வாறு செய்யும்போது அடுத்த சில மாதங்களிலேயே உங்களுடைய சேமிப்பு தானாக உயர ஆரம்பித்து விடும்.

கொரானா மட்டுமல்லாமல், வேறு எதிர்பாராத தடுமாற்றங்களை சமாளிக்கவும், இனி வரும் காலங்களில் மக்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். 

English Summary

Therefore, People have to Save..!

Latest Articles

KOLNews