KOLNews

'வெரி குட்' சொல்ல வைக்கும் வெஜிடபிள் குருமா..!

என்னதான் சப்பாத்தி, பாரத்தா போன்றவைகளை சிறப்பாக சமைத்திருந்தாலும், அதற்கு தகுந்த சைடு - டிஷ் இருந்தால் மட்டுமே ..சாப்பிடுபவரை 'வெரி குட்' சொல்ல வைக்கும். 

அப்படி ஒரு சைடு - டிஷ்  வெஜிடபிள் குருமா..!

தேவையான பொருட்கள் - 

உருளைக்கிழங்கு -  4, பச்சை பட்டாணி - ஒரு கப்,  காலிஃப்ளவர் - 1 சிறியது,  பெரிய வெங்காயம்-  1, தக்காளி - 2,  பூண்டு -  6 பல்,  தேங்காய் துருவல் - 1 கப்,  தயிர் -  1 கப்,. கசகசா - 1 டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், கிராம்பு - 4,  பட்டை - 2 துண்டு,  சீரகம் - அரை டீஸ்பூன்,  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,  மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,  மல்லித் தூள் - அரை டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிதளவு.

 செய்முறை - 

வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து பொடியாக நறுக்கவும். பின், மற்ற காய்கறிகளை தோல் சீவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக அரியவும். அதேபோல் தக்காளியை துண்டுகளாக நறுக்கவும்.

 பின் சூடான வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் எல்லா மசாலா சாமான்களையும் வறுக்கவும் அதில் பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அப்படி வதக்கும் போது, வெங்காயம் நிறம் மாறியதும் தக்காளி மற்றும் தேங்காய் சேர்த்து குறைந்த தீயில் ஓரிரு நிமிடங்கள் வேகவிடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும். இதை சூடு ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு தயிர் சேர்த்து அரைக்கவும்.

 ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, சூடாக்கி, அதில் அறிந்த காய்கறிகளைப் போட்டு வதக்கி வேக விடவும். அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த விழுதைக் கொட்டி, காய்கள் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை மூடி வைத்து வேகவிடவும். 

அவ்வப்போது அடிபிடிக்காமல் கிளறிவிடவும் . இறக்கியவுடன் கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும். சப்பாத்தி, பராத்தா, புலா போன்றவற்றுடன் இதை பரிமாறவும்.

English Summary

Vegetable kurma that makes you say 'very good' ..!

Latest Articles

KOLNews