KOLNews

'பவளம்' போன்ற உதடுகள் வேண்டுமா..?

உதடுகள்..ஜீவன் உள்ள உதடுகளாக தெரிய வேண்டும். அது நல்ல நிறம், செழுமை, பளபளப்பு அனைத்தும் இருந்தால் பார்ப்பவர்களை வசீகரிக்கும் என்பதில் ஐயமில்லை. அப்படி உங்கள் உதடுகள் அமைய..இதோ சில எளிய வழிகள் ..

சிவப்பு ரோஜா பூக்களின் இதழ்களை அரைத்து உதடுகளில் பூசுங்கள். ஒரு மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள்.மூன்று நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால் உதடுகளுக்கு நல்ல நிறம் கிடைக்கும்.

தினமும் ஒரு முறை எலுமிச்சை பழச்சாறை உதடுகளில் தேயுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள்.அதே போல, நேரம் கிடைக்கும்போதெல்லாம் பாலாடையை உதடுகளில் பூசி, அது காய்ந்து போனதும் கழுவி விடுங்கள்.

14 Amazing Benefits of Honey for Skin and How to Use It - DLT Beauty

குறிப்பாக குளிர்காலத்தில் தான் உதடுகள் அதிகமாக பாதிக்கப்படும். அப்போது உதடுகளில் கீறல் விழும். முதலிலே உஷாராகி தினமும் உதடுகளில் தடவி வந்தால் உதடுகளை பாதுகாக்கலாம். உதடுகளில் நல்லெண்ணெய்யை தேய்த்து மென்மையான மசாஜ் செய்துவிட்டால் காலப்போக்கில் உதடுகள் ஜொலிக்க தொடங்கிவிடும்.இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னால் உதடுகளில் தேனை பூசுங்கள், 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள். கேரட் ஜூஸ் பருகுவது சருமத்திற்கு நல்லது. தினமும் கேரட் சாறை உதடுகளில் தேய்த்தால், உதடுகளுக்கு கேரட் போன்ற நிறம் கிடைக்கும். மாமரத்தின் துளிர் இலையையும் ரத்த சந்தனத்தையும் அரைத்து உதடுகளில் பூசி, அரைமணி நேரம் கழித்து கழுவி விடுங்கள்.

10 Amazing Benefits Of Using Glycerin For Lips

அதே போல, ஆமணக்கு எண்ணெய்,  பாதாம் எண்ணெய் இரண்டையும் கலந்து உதடுகளில் தொடர்ந்து பூசி வந்தால் உதடுகளுக்கு நல்ல நிறம் கிடைக்கும். கிளிசரின் மற்றும் பன்னீர் கொண்ட கலவையை வெடிப்பின் மீது பூசி வந்தால் வெடிப்புகள் மறைந்து உதடுகள் மென்மையாகும். பீட்ரூட்டை வெட்டி அதன் சாற்றை உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப்பழகு பெறும்.

நில ஆவாரை, எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து தடவி வந்தால் உதடுகள் சிவப்பாக மாறும். கொத்தமல்லி சாற்றை இரவில் பூசி வர உதடு கருப்பு நிறம் மாறும். ரோஜா இதழ்களை நசுக்கி சாற்றை எடுத்து பூசிவர உதடுகள் சிவப்பாக மாறும். சந்தனத்தை பன்னீரில் குழைத்து பூசி வரலாம்.

உதட்டில் ஏற்படும் வெடிப்பு மற்றும் வறட்சியை போக்க பாலாடையை தினமும் தேய்த்து வர வேண்டும். மேலும், ரோஜா இதழ்களை பால் விட்டு அரைத்துப் பூசி வந்தால் உதடு வெடிப்பு மாறும்.

English Summary

Want lips like 'coral' ..?

Latest Articles

KOLNews