KOLNews

எப்போது சாப்பிடவேண்டும் தயிர் சாதம் ?

பொதுவாக நாம் சாப்பாடு சாப்பிடத் தொங்கியதும் வாயில் காரத்தன்மை கொண்ட எச்சில் ஊறும் . சாதத்தை நன்றாக மெல்லும் போது போதிய எச்சில் கலந்து வயிற்றிற்குள் சென்றவுடன் அமிலத்தன்மை கொண்ட ஜீரண நீர் சுரக்கும் . முதலில்  உண்ணப்படும் சாதம் , காய்கறிகள் , அமிலத்தன்மை கொண்ட வயிற்றில் சமநிலை ஏற்படுத்தத் தொடங்கும் சமயத்தில் சாம்பார் சாதத்தை சாப்பிட்டவுடன் ஏற்படும் அமிலச் சுரப்பால் வயிறு மீண்டும் அமிலத் தன்மைக்கு ஆளாகும் . அதன் பிறகு புளிப்பு கலந்து ரச சாதத்தை சாப்பிட வயிறு இறுதியில் அமில நிலையிலேயே இருக்கும் . அப்போது தான் தயிர் சாதத்தைச் சாப்பிடுகிறோம் . 

இந்த அமில நிலையையே சாதகச் சூழலாகக் கொண்டவை இந்தத் தயிர் பாக்டீரியாக்கள் . குறிப்பிட்ட அமில நிலையிலேயே இருக்க , சுவைக்கும் ஊறுகாய் மிகுதியாக சுரக்கும் அமிலத்தைச் சமன்படுத்துகிறது . அதனால் தான் தயிர் சாதத்திலுள்ள பாக்மரியாக்கள் சாதகச் சூழல் கிடைத்தவுடன் தடைப்படாமல் பெருக்கத்தைச் செய்ய முடிகிறது . இப்படிப்பட்ட சாதகச் சூழலை ஏற்படுத்தும் , ரசம் சாதத்திற்கு அடுத்தது தான் தயிர்சாதம் என்பது எழுதப்படாத சட்டம் , இதனால் தான் கடைசியாக தயிர் சாதம் உண்ணும் முறையை நம் முன்னோர்கள் பழக்கத்திற்கு கொண்டுவந்தார்கள். மேலும் கடைசியாக மட்டுமே தயிர்சாதம் உண்ணப்படுவதால் , அடுத்த வேளை உணவு உண்ணும் தடையில்லாமல் உணவுப்பாதை நெடுகிலும் பெருக்கத்தை ஏற்படுத்தும் , 

இரவில் தயிர் சாதம் சாப்பிடலாமா ? 

பொதுவாக இரவில் குறைந்த அளவே உன்ன வேண்டும் . இரவு உறங்கும் போது பித்தநீர் குறைந்து இருப்பதே நல்லது . உடலில் பித்தம் குறைந்துள்ள நிலையில் குளிர்ச்சி உண்டாக்கும் தயிர் சாப்பிட நேரிடின் உடல் மிகவும் குளிர்ச்சியடைந்து வாத , பித்த , கப சமநிலையை முற்றிலும் மாற்றிவிடும் . இதனாலும் , மதியம் உண்ட தயிர் சாதத்திலுள்ள பாக்டீரியாக்கள் போதிய அளவில் இருக்கும் போதே இன்னும் இரவு உணவின் மூலம் பாக்டீரியாக்கள் சென்றடையும் போது , அளவுக்கு மீறிய தயிர் பாக்டீரியாக்கள் பெருக்கம் மற்ற நன்மை தரும் பாக்டீரியாக்களை வளரவிடாமல் தடுத்துவிடும் . அதனால் உடல் சமநிலை மாறுபடும் . இந்நிலை ஏற்படாமல் இருக்கவே இரவில் தயிர் சாதத்தைத் தவிர்ப்பதே நல்லது . 

English Summary

When to eat curd rice?

Latest Articles

KOLNews